ஒரு குட்டி கதை!

Re: I like this, do you?

Postby chittibabu » Thu Nov 07, 2013 4:57 pm

சிந்திக்க வைத்த கதை:

"ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒரு வார காலம் இருந்தது.

மேலும், அது சுலபமான பேப்பர் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாச ஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது.

அப்போது ஒரு நண்பன், "கிளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும். பரீட்சை நேரத்துக்கு கல்லூரி போய்விடலாம்" என்றான்.

அதுவும் சரிதான் என்று நண்பர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாக கழித்துவிட்டு, இரவு தாமதமாக தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண் விழித்தார்கள். 'சரி, பேராசிரியரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்ற நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.

பேராசிரியர் முன்பு நல்ல பிள்ளைகளைப் போல் நின்றவர்கள், 'சார்.. நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைப்பகுதிக்கு சென்றிருந்தோம். அங்கிருந்து நேராக பரீட்சை எழுத கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் புறப்பட்டோம். வழியில் கார் பஞ்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள் தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும் .." என்று பொய்யை மெய்போல் உருகி சொன்னார்கள்.

பேராசிரியரும் ஒப்புக் கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்காந்தார்கள். முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதி விட்டு அந்த கேள்விக்கான மதிப்பெண் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தை திருப்பினார்கள். 95 மதிப்பெண்கள் என்ற குறிப்புடன் காணப்பட்ட அந்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது. அந்தக் கேள்வி- 'உங்கள் காரில் பஞ்சரானது எந்த டயர்?'

பஞ்சர் என்று பொய் சொன்னார்களே தவிர.. இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இந்த டயர் தான் பஞ்சர் ஆனது என்று நாலு பேரும் ஒன்று போல் பதிலளிக்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!

பொய் என்பது ஒரு தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல.. அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல. வாழ்ந்து முடிந்த பிறகும் கூட பலன் கொடுக்கும்..."
என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1258
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: I like this, do you?

Postby chittibabu » Tue Nov 12, 2013 3:00 pm

பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்…!
என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1258
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: I like this, do you?

Postby kpadsi » Tue Nov 12, 2013 9:14 pm

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ் பண்ணா...ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்சுடு மேரேஜ் ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! இஷ்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3347
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: ஒரு குட்டி கதை!

Postby chittibabu » Sat Nov 16, 2013 2:34 pm

''ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.

அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக்காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

''என்னப்பா பண்ணலாம்?'னு கேட்டார்.

'அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க...

நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க.

நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சுட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.


பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு 'சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தான் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.

தத்துவம்,

மந்திரம்,

பாவம்,

புண்ணியம்,

சொர்க்கம்,

நரகம்னு

சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப்படுத்திட்டார் குரு.


பிரசங்கம் முடிஞ்சுது. 'எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

'அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க...

நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.

முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.

அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!’

என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1258
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: ஒரு குட்டி கதை!

Postby chittibabu » Sat Nov 23, 2013 1:17 pm

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராககிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராகசென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.

அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..''ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..

என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரைஎன் நாய் கடித்து விட்டது.உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.

அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்
என்றும் அன்புடன்
K.L. சிட்டி பாபு
User avatar
chittibabu
Golden Contributor
 
Posts: 1258
Joined: Mon Feb 12, 2007 3:08 pm
Location: Chennai

Re: ஒரு குட்டி கதை!

Postby jillumaya » Wed Dec 04, 2013 9:53 pm

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் – கதை

ஒரு ஆராய்ச்சியாளர், தான் ஆராய்ச்சிக்கு ஒரு ஆண், பெண் தேவை என்று விளம்பரம் செய்தார். தேர்வுக்கு வந்தவர்களில் ஒரு ஆண் மற்றும் பெண்ணை தேர்வு செய்தார். அவரது ஆராய்ச்சி என்னவென்றால் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமா மனிதரில் உடலில் செலுத்தி அவர்களின் ரத்ததில் ஏற்படும் மாற்றத்தை கவனிப்பது. இந்த ஆராய்ச்சியின் காலம் இரண்டு வருடம். வருட முடிவில் அந்த மனிதன் இறந்து விடுவான்.

அவர் தேர்வு செய்த ஆணுக்கும் பெண்ணுக்கும் விஷத்தை தான் உச்செலுத்தப் போகிறார். இது அவர்களுக்கும் தெரியும், தாம் இறந்து விடுவோம் என்பதும் கூடத் அவர்களுக்கு தெரியும். அவர்கள் இந்த ஆய்வுக்கு ஒப்புக்கு கொண்டதே மருத்துவர் அவர்களது குடும்பத்துக்கு பணம் கொடுத்து இருக்கிறார். தாங்கள் இல்லா விடினும் குடும்பம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

மருத்துவர் சொன்ன ஒரேஒரு கண்டிஷன் என்னவென்றால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள கூடாது என்பதுதான். இருவருக்கும் வேறு வேறு பணி கொடுக்கப்பட்டது. இருவருக்கும் காலை மற்றும் மாலையில் விஷ ஊசி போடப்படும்.

இப்படியே ஒரு வருடம் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் கையை வெட்டி கொண்டாள். அவன் அவளுக்கு முதலுதவி செய்தான். இருவரும் பேசிக்கொண்டனர், கருத்து பரிமாறிக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல நடப்பு காதலாக மாறியது. இறந்து விடுவோம் என்று தெரிந்தே காதல் வந்தது இருவருக்கும். இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. இருவரும் இறக்க போகின்றனர்.

விடிந்தது இருவருக்கும் ஊசி போடப்பட்டது. மாலை வந்தது கடைசி ஊசி போடாப்பட்டது. ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே எவ்வளவு நேரம் விழித்து இருந்தனர் என்றே தெரியவில்லை. அப்படியே உறங்கி போனார்கள்.

தூக்கத்திலேயே இறந்து விடுவோம் என்று எண்ணி இருந்த இருவருக்கும் அதிர்ச்சி. அவர்கள் இறக்கவில்லை. இரண்டு வருடங்களாக அவர்களுக்கு க்ளுகோஸ் நீர் தான் செலுத்தப்பட்டது. உண்மையில் மருத்துவர் செய்த ஆராய்ச்சி என்னவென்றால் இறக்கும் நேரத்தில் ஒரு மனிதனின் மன நிலை எப்படி இருக்கும் என்றுதான். அனுதினமும் இருவரது மன நிலையை அவர்கள் அறியாது ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார். ஆனால் அவர் உணர்ந்தது அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை. அன்பு செலுத்தவும் ஆயுள் தேவை இல்லை.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: ஒரு குட்டி கதை!

Postby jillumaya » Thu Dec 12, 2013 9:36 pm

அண்ணன் தங்கை உறவு

துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம்.

இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர்.
ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்படவேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது.

தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான்.
இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது.

மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி,
"உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா?" என்று கேட்டனர்.
சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான்.
சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனை தைரியமூட்டி கொண்டிருந்தனர்.
பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது.
சிறுவன் மருத்துவரை பார்த்து,
"டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?"
என்று சோகமான குரலில் கேட்டான்.

சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே டாக்டர்,
’ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை’
என்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார்.

"சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான்.
தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான் " யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு.."

அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோரும்,
செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தினர்.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: ஒரு குட்டி கதை!

Postby jillumaya » Wed Jan 08, 2014 9:48 pm

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான்.

அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அதற்கு மீன் பிடிப்பவன், தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.

'அது எப்படி செயல் படுகிறது..??' என்று கேட்டான்.

''சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்...!'' என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான்.

இப்போது மீனவன் சொன்னான்,''நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும். அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.

வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான், 'இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. இப்படி தான் நீ மீன் பிடிப்பாயா..? அது சரி, இன்று இந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்..?

மீனவன் சொன்னான்....

''இன்று நீ ஆறாவது...!!'' :lol:

இப்படித்தான் நம்மில் பலர் “பணம் சம்பாதிப்பது எப்படி..??” கோடீஸ்வரர் ஆவது எப்படி..??” சிறப்பாக தொழில் செய்வது எப்படி..??” என்று எழுதப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றனர்...!!!
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: ஒரு குட்டி கதை!

Postby jillumaya » Sun Jan 26, 2014 10:05 pm

ஏங்க, இன்னிக்கு உங்க அம்மா என்ன பண்ணுனாங்கன்ணு தெரியுமா ?…
அலுவலகத்தில் இருந்து வந்த கணேஷிடம் அவனுடைய மனைவி, அவன் அன்னையை பற்றி குறை கூற ஆரம்பித்தாள்
இது ஒன்றும் புதிதல்ல இவனுக்கு
திருமணமான சில மதங்களில் மாமியாரை குறை கூற ஆரம்பித்தவள், சிறிது சிறிதாக சண்டை போட ஆரம்பித்து ஒரு சமயத்தில் முதியோர் இல்லம் சென்று விடும் அளவிற்கு சென்றது

அவனுடைய அம்மாவின் பொறுமையினாலும் குழந்தைகளை தனியாக வளர்க்க முடியாது என்பதாலும் அவன் மனைவி சிலகாலம் பொறுமையாய் இருந்தவள்
இப்போது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டதனால் தனது மாமியார் தனக்கு சுமை எண்று நினைத்தாலோ, என்னவோ பழையபடி மாமியாரை குறை கூற ஆரம்பித்துவிட்டாள்.

தீபாவளிக்கு விடுமுறை எடுத்ததால் நிறைய வேலைசுமைகளை கடந்து தலைவலியுடன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவனுக்கு இவளின் வார்த்தைகள் அவள் மேல் கோவத்தை வரவைத்தது

அவளிடம் தனது கோவத்தினையும், வலியையும் காட்டாமல் பொறுமையாக “என்னவாயிற்று” என்று வினவியவனிடம்

பள்ளிகூடம் விட்டு வந்த நம்ம பிள்ளைகளுக்கு நான் இனிப்பு பலகாரம் எல்லாம் கொடுத்து அவர்களை விளையாட சொல்லிவிட்டு வீட்டு வேலைகளை பார்த்துகொண்டிருந்த நேரம் குழந்தைகள் அழுதுகொண்டு இருந்தாங்க

நான் என்ன என்று கேட்டதும் என்னிடம் வந்து “பாட்டி பலகாரத்தினை பிடுங்கிகிட்டாங்கன்னு, அழுதுகிட்டே சொன்னங்க” என்றாள் கோபமுடன் …..

இவனுடைய கோவம் இன்னும் அதிகமாகி மேலும் அவனுடைய பார்வை அம்மாவின் பக்கம் திரும்பியது

கோவமாக வாயில் பக்கம் ஒரு போர்வைக்குள் முடங்கி இருந்த அந்த வயோதிக அம்மாவிடம் சென்று கடும்சொற்களால் திட்ட ஆரம்பித்தான்.

ஒரு வழியாக திட்டி முடித்த பின் அவனுடைய அம்மா

அவன் முகத்தை பரிதாபத்துடன் பார்த்து

என்ன ப்பா அலுவலகத்தில் நிறைய வேலையா, ரொம்ப களைப்பா வந்து இருக்கியா என்றவள்.

இந்தாப்பா இந்த பலகாரம் உனக்குன்னுதான் எடுத்து வச்சேன். உனக்கு கண்டிப்பா உன் மனைவி உனக்கு கொடுக்கமாட்டான்னு எனக்கு தெரியும்

அதனாலதான் என் பேரபிள்ளைகளிடமிருந்து வாங்கி உனக்குன்னு எடுத்து வைத்தேன்

இந்தாப்பா பலகாரம் சாப்பிடு – என்றாள்

அப்படியே சிலையாக நின்றிருந்தவனிடம்

ஆயிரம் தான் இருந்தாலும் நீ என்னுடைய பிள்ளை ப்பா பாவம் நீதான் எவ்வளவு கஷ்டபடுவ

உனக்கு பாரமா இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன் ஆனால் என்ன செய்றது….

மேலும் தனது அம்மாவை பேசவிடாமல் தனது கண்களில் வழிந்த கண்ணீருடன் அம்மாவை வீட்டின் உள்ளே அழைத்து சென்றான்!

(தம்பி கமல்நாத் ப்ளாக்கிலிருந்து)
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: I like this, do you?

Postby jillumaya » Mon Feb 03, 2014 7:28 pm

காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: I like this, do you?

Postby jillumaya » Sun Apr 06, 2014 6:12 pm

Dear M/s. Siva and Chandras,

Thanks for making the thread alive and for posting interesting likable facts.

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.

அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்"
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: ஒரு குட்டி கதை!

Postby jillumaya » Tue May 20, 2014 10:06 pm

பன்றியா? பசுவா?

வாரிசு இல்லாத செல்வந்தன் ஒருவன் துறவி ஒருவரை சந்தித்தான். சுவாமி எனக்குக் குழந்தைச் செல்வம் இல்லாததால் என் செல்வம் முழுமையும் என் மரணத்திற்குப் பின் பொதுச் சொத்தாகத்தான் மாறப்போகிறது. ஆனால், என்னை ஒருவரும் மதிப்பதில்லையே..! என வருத்தமாகக் கேட்டான். அவனிடம் துறவி கேட்டார், எல்லோரும் விரும்புவது பன்றியையா, பசுவையா? இதில் என்ன சந்தேகம் சுவாமி, பசுவைத்தான்..! என்னப்பா இப்படிச் சொல்கிறாய். பசு, பாலை மட்டும்தான் தருகிறது. ஆனால் பன்றி தன்னையே அல்லவா இறைச்சியாகத் தருகிறது? ஆனால் சுவாமி, பசு உயிருடன் இருக்கும்போதே பிறருக்கு உதவுகிறது. பன்றி இறந்தபின் அல்லவா பிறரால் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது..? அதனால்தானே பசுவுக்குப் பெருமை? பதிலளித்த பணக்காரனிடம் துறவி அமைதியாகச் சொன்னார்.. நீயும் பசுவைப்போல் இருக்கும்போதே பிறருக்கு உதவு.. உன்னையும் புகழ்வார்கள்..!

=D>
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: ஒரு குட்டி கதை!

Postby jillumaya » Sat Jan 23, 2016 12:13 pm

"பிரியமானவன்"...!

ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள்.
எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.

கணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் "உங்களுக்கு பயம் இல்லையா".? என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் "இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக சிரிக்கிறாய்?" என்று.

அதற்கு மனைவி சொன்னால் " கத்தி கூர்மையானதுதான், ஆனால் அந்தக்கத்தியை வைத்திருக்கும் என் கணவர் "எனக்கு மிகவும் பிரியமானவர்" என்று புன்னகையோடு பதிலளித்தாள்.

கனவனும் புன்னகையோடு "இந்த கடலலைகளும், இடியும், மின்னலும் பயங்கரமானவைதான், ஆபத்தானவைதான்.

ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன், என் "அன்புக்கு பிரியமானவன்". அதனால் எனக்கு எவ்வித பயமுமில்லை என்றான்...!

"பிரியமானவர்கள்' நம் அருகில் இருந்தால் நமக்கு எந்த பயமும் இருக்காது.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Previous

Return to Short Stories

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron