கோகிலவாணி 1956

கோகிலவாணி 1956

Postby sunda_ram » Fri Oct 25, 2013 2:40 pmசரச மோகன சங்கீதாம்ருத சாரலில்
மாங்குயில் கூவுது பார்
சுவையில் தேனிசை கேட்பவர் யாவரும்
சித்திரம் ஆகும் விசித்திரம் பார்

சரச மோகன......

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான்கவி சுகக்குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீதம்

சரச மோகன...

மந்தை மேகங்கள் மாமழை பொழியும்
விந்தையாய் மயில் வளைந்தசைந்தாடும்
மந்த மாருதம் மலரிசை பாடும்
அந்த கீதமே அமர சங்கீதம்

சரச மோகன.....


படம் : கோகிலவணி1956
இசை : ஜி. இராமநாதன்
பாடல் : எஸ்.டி. சுந்தரம்
பாடியவர் : சீர்காழி
sunda_ram
Junior Member
 
Posts: 22
Joined: Sat Jan 26, 2013 9:30 pm
Location: India

Return to "K"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron