KARAIKKAL AMMAIYAR

KARAIKKAL AMMAIYAR

Postby balankamala » Fri Jan 11, 2013 11:59 am

படம் : KARAIKKAL AMMAIYAR
பாடல்: KANNADASAN
பாடியவர்: K.B.SUNDARAMBAL

ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால்
பாட வந்தேன் பரம் பொருளே
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால்
பாட வந்தேன் பரம் பொருளே
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய்
இறைவா உன் தமிழமுதை
படித்த நான்பாடும் படி
உன் தமிழமுதை படித்த நான்பாடும் படி

தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே
ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே

தாளவகைகளொடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர்கணமே
காலைத் தூக்கியே ஆ னந்த தாண்டவ ம் ஆடிடு மன்னவனே
தாளவகைகளொடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர்கணமே
காலைத் தூக்கியே ஆ னந்த தாண்டவ ம் ஆடிடு மன்னவனே
முத்துக் கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
வெள்ளம் துணையென பக்திக் கொடி
படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் பெயரென
பற்றுந்தரும் பரமன் துணையென
சுற்றத்தொடு மனிதர் குலமொரு இசை பாட
கற்றுத்தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவது போல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெருவார் அவர்களும் உறவாட
திக்குப்பல திமி திமி திமி என
தக்கத்துணை தக தக தகவென
தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட

இம்மைக்கும் ஏழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாள வா
இயல், இசை, நாடகம், முத்தமிழ் தம்மிலே
இயங்கியே உலகாள வா
அம்மைக்கும் நாயகா, அப்பனே ஐய னே
அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீ ஆ ட வா

சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச்செய்த நீ
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச்செய்த நீ
கருப்பைக்குள் இருப்புக்கும், உயிர் தந்த நீ
கலிப்புக்குள் உலகங்கள் நட மாடவா
உலகத்து நிதியே, சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே, இருளுக்குள் ஒளியே

ஆ ட வா - நட மாடவா, - விளையாட வா
உலகாட வா, ஆ ட வா - நட மாடவா, - விளையாட வா
உலகாட வா,
நாத, கீத, போத, பாவ, ராக
தாளமொடு அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட, படை நடுங்கிட
தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தக தக தக தகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

DR.K.K.S.
balankamala
Cool Member
 
Posts: 52
Joined: Thu May 10, 2012 10:42 am
Location: india

Return to "K"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron