Karpukarasi - 1957

Karpukarasi - 1957

Postby Geetha » Sat Feb 24, 2007 6:52 pm

தூங்காது!கண் தூங்காது!
இருள் சூழும் உலகில்
பொதுவாழ்வு தோன்றும்வரை
தூங்காது; கண் தூங்காது! (தூங்காது)

வேங்கைவாட நரி மேன்மையாவதும்,
வேங்கைவாட நரி மேன்மையாவதும்,
வீரர்மரபு தாழ்வதும் நீங்கும்வரை
தூங்காது; கண் தூங்காது!

ஆதி நீதி முறை ஆட்சி செய்யவே
அன்பு மழை பெய்யவே
சோதி இறையருள் ஆறுபாயவே
பேதம் மறைந்து உய்யவே, காணும்வரை
தூங்காது; கண் தூங்காது

இருள் சூழ்ந்த உலகில்
பொதுவாழ்வு தோன்றும்வரை
தூங்காது; கண் தூங்காது!
User avatar
Geetha
Valued Contributor
 
Posts: 244
Joined: Mon Jan 08, 2007 10:35 pm

Karupukarasi - 1957

Postby Geetha » Sat Feb 24, 2007 11:16 pm

இல்லாத அதிசயமா
இருக்குதடி ரகசியமா
எதைநெனச்சி இவமனசு
இப்படி யாச்சுதோ? (எதை)

கண்ணுக்குள்ளே புகுந்திருந்த
காதலனைப் பிரிஞ்சிருந்தா
கவலைப்பட்டு மெலிவதுண்டு -அப்படியிருக்குமா?-இல்லை

முன்னும் பின்னும் பழக்க மின்றி
மொதன் மொதலாப் பாத்திருந்தா
என்னென்னமோ பண்ணிடுமாம்-இப்படியிருக்குமா?

சின்னஞ்சிறு பருவத்திலே
ரொம்ப ரொம்ப ஆழத்திலே
சிந்தனைகள்
செல்வதுண்டு-அதாயிருக்குமோ?-இல்லை

கன்னியரின் கனவினிலே
காணுகின்ற கடலுக்குள்ளே
எண்ணமீன்கள் மேய்வதுண்டு -இதாயிருக்குமோ?

மன்னன் மேலே வெச்ச
ஆசை வளருது-மனசு
வண்டிச் சக்கரம் போலே
சும்மா சுழலுது

வேலையாய்ப் போனவரு
வெற்றியுடன் வருவாரு
மாலயிட்டு மணமுடித்து
வாழ்விலின்பம் தருவாரு

வாழைத் தோட்டம் போல தழைத்து
மங்கலமாய் வாழ்வாரு
மஞ்சுளா முகத்தினிலே
மஞ்சளாகத் திகழ்வாரு

வெளக்கி எடுத்த
வெங்கலத் தவலை-உனக்கு
என்னடி கவலை

அந்த ராசாமகன் ராசாவுக்கு
ராசாத்தியாய் ஆவதற்கு
நல்ல நாளும் வந்து இருக்கு ஆனாலும்
இந்த ராணிக்குத் தான்கொஞ்சம் கிறுக்கு (இல்லா)
User avatar
Geetha
Valued Contributor
 
Posts: 244
Joined: Mon Jan 08, 2007 10:35 pm

Karpukkarasi

Postby revathi_malar » Tue Oct 16, 2007 11:51 am

Movie: Karpukkarasi
Song: Idhya Vaanile
Singer: TMS
Music: G Ramanathan
Lyric: PattukkOttai KalyAnasundharam

இதய வானிலே உதயமானதே
இதய வானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத
புதிய லோகமே

இதய வானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத
புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

இன்ப நிலை....
இன்ப நிலை என்னவென்று
கண்டு கொண்டேனே
நான் கண்டு கொண்டேனே
மெய் அன்பு வலை வீசும்
தங்க சிலையைக் கண்டேனே
மெய் அன்பு வலை வீசும்
தங்க சிலையைக் கண்டேனே
ஆனந்த‌மெனும் தேன‌முத‌ம் உண்ணுகின்றேனே
ஆனந்த‌மெனும் தேன‌முத‌ம் உண்ணுகின்றேனே
எல்லாம் இனிமேலே ஆகும் ம‌ன‌ம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் ம‌ன‌ம் போலே

இதய வானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத
புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே
User avatar
revathi_malar
Valued Contributor
 
Posts: 346
Joined: Sat Jan 13, 2007 3:33 am

Karpukkarasi

Postby revathi_malar » Tue Oct 16, 2007 12:03 pm

Song: Kaniya Kanniya
Singers: TMS, Jikki

கனியா கன்னியா
வாழ்வில் இன்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத‌
கன்னியமுதம் உண்ண வா

கனியா கன்னியா
வாழ்வில் இன்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத‌
கன்னியமுதம் உண்ண வா
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
காத‌லோடு க‌னியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்
காத‌லோடு க‌னியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்

இன்னுமென்ன ?
அருகில் வந்து பேசவா
இன்னுமென்ன ?
அருகில் வந்து பேசவா
நெஞ்சில் இழையும் காதல்
மொழியெடுத்து பேசவா
சொல்லி ஒன்றும் தெரிவ‌தில்லை
ம‌ன்ம‌த‌க் க‌லையே நீ
சொல்லி ஒன்றும் தெரிவ‌தில்லை
ம‌ன்ம‌த‌க் க‌லையே
நீ தூர நின்ற போதும்
இன்பம் கனியும் வாழ்விலே
தூர நின்ற போதும்
இன்பம் கனியும் வாழ்விலே
ப‌ருவ‌கால வசந்த‌ம் இன்று
பாழ் ப‌ட‌லாமா
ப‌ருவ‌கால வசந்த‌ம் இன்று
பாழ் ப‌ட‌லாமா
வெரும் பார்வையாலே மட்டும்
காதல் சுகமே பெறலாமா
வெரும் பார்வையாலே மட்டும்
காதல் சுகமே பெறலாமா
இனிக்கும் இர‌வில் உற‌வு நேரும்
வாழ்விலே
இனிக்கும் இர‌வில் உற‌வு நேரும்
வாழ்விலே
பெண் க‌னியைக் க‌ண்டு
சுக‌மே பெறுவேன் நேரிலே
சொன்ன‌ சொல்லை உண்மை என்றே
ந‌ம்ப‌லாகுமா ?
நான் சொல்வ‌தில்லை ! சொன்ன‌ பின்னும்
கேள்வி வேண்டுமா
உறவே தோன்றுமா
இன்றிர‌வே காண‌லாம்
உறவே தோன்றுமா
இன்றிர‌வே காண‌லாம்

கனியா கன்னியா
வாழ்வில் இன்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத‌
கன்னியமுதம் உண்ண வா
User avatar
revathi_malar
Valued Contributor
 
Posts: 346
Joined: Sat Jan 13, 2007 3:33 am

Re: Karpukarasi - 1957

Postby sunda_ram » Tue Nov 05, 2013 11:14 amஇனிமையும் குதூகலமும் பிணைந்த.......


அவன்
கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி

அவள்
கனவோ நனவோ இதுவெல்லாம்
கதையில் காணும் கற்பனையோ

அவன்
கனவிலே நான் கண்ட கலைமணியே
கருத்தினிலே கலந்த கண்மணியே

கற்புக்கரசியே கண்ணகியே
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
கற்புக்கரசியே கண்ணகியே என்
கரங்களைப் பற்றிய காரிகையே

கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி

அவள்
அணையில்லா வெள்ளமா உமது அன்பே
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
அடைந்ததும் என் தவப் பயனன்றோ

இணையில்லா பாக்கியம் பெற்றவர்கள்
எனைப் போல் உலகில் எவரும் உண்டோ

கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி

அவன்
உண்மை அன்பின் இருப்பிடமே
உனைப்போல் காணவும் கிடைத்திடுமோ
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
உண்மை அன்பின் இருப்பிடமே
உனைப்போல் காணவும் கிடத்திடுமோ

அவள்
அன்பே என்றும் நிலைத்திடுமோ
அணையாச் சுடராய் விளங்கிடுமோ
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
அன்பே என்றும் நிலைத்திடுமோ
அணையாச் சுடராய் விளங்கிடுமோ

அவன்
இன்பம் எல்லாம் நம் சொந்தமே
அவள்
என்றும் பிரியா ஆனந்தமே

இருவரும்
கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி


படம் : கற்புக்கரசி 1957
பாடியோர் : P B ஸ்ரீநிவாஸ் M L வசந்தகுமாரி
வரிகள் : உடுமலை நாராயண கவி
இசை : ஜி . ராமனாதன்
sunda_ram
Junior Member
 
Posts: 22
Joined: Sat Jan 26, 2013 9:30 pm
Location: India


Return to "K"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron