Kannadi Maaligai

Kannadi Maaligai

Postby venougopal » Thu Dec 14, 2017 3:38 am

திரைப்படம் : கண்ணாடி மாளிகை (1962)
பாடல் : நாணம் ஏனோ இந்த வேளையிலே
பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் & எஸ்.ஜானகி
பாடலாசிரியர் : முடியரசன்
இசை : T.D.பத்மன்

நாணம் ஏனோ இந்த வேளையிலே
வண்டு நாடி ஓடும் மலர் சோலையிலே
நாணம் ஏனோ இந்த வேளையிலே

ஆஆஆ...
வண்டு நாடி ஓடும் மலர் சோலையிலே
நானும் நீயும் இந்த மாலையிலே
நல்ல நாதம் ஆவோம் காதல் வீணையிலே


காதல் வானிலே கதிரென வந்தாய்
காணாத இன்பம் கண்டிட செய்தாய்
காதல் வானிலே கதிரென வந்தாய்
காணாத இன்பம் கண்டிட செய்தாய்

கூடும் நமக்குள்ளே உருவம் வேறு
காதல் கொண்ட நெஞ்சில் பேதமேது


பேதம் யாவுமே தீர்த்திட வந்தாய் இந்தப்
பேதை நெஞ்சம் மலர்ந்திட செய்தாய்
பேதம் யாவுமே தீர்த்திட வந்தாய் இந்தப்
பேதை நெஞ்சம் மலர்ந்திட செய்தாய்


நாணம் ஏனோ இந்த வேளையிலே
ஆஆஆ...
வண்டு நாடி ஓடும் மலர்ச் சோலையிலே
ஆஆஆ...
நானும் நீயும் இந்த மாலையிலே

நானும் நீயும் இந்த மாலையிலே
நல்ல நாதம் ஆவோம் காதல் வீணையிலே
Last edited by venougopal on Tue Jan 02, 2018 1:54 pm, edited 1 time in total.
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 896
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Re: Kannadi Maaligai

Postby kpadsi » Thu Dec 14, 2017 10:19 pm

Music director is T D Padman and not vedha.
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3336
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: Kannadi Maaligai

Postby meenuashok » Sat Dec 16, 2017 1:57 am

ஆமாம்...கண்ணாடி மாளிகை இசை அமைப்பாளர் T.D. பத்மன். இவருடைய புதல்வர் தான் இசை அமைப்பாளர் தீனா...

நன்றி

அசோக்
meenuashok
Valued Contributor
 
Posts: 710
Joined: Sat Mar 27, 2010 4:10 pm
Location: Dubai

Re: Kannadi Maaligai

Postby venougopal » Tue Jan 02, 2018 2:11 pm

கண்ணாடி மாளிகை திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேதா என்று தவறாக பதிவு செய்தமைக்கு வருந்துகிறேன். சரியான இசையமைப்பாளர் பெயரை தெரிவித்து உதவிய நண்பர்கள் திரு.கே.சிவா மற்றும் திரு.அசோக் அவர்களுக்கு நன்றி.
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 896
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry


Return to "K"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search