Karnan

Karnan

Postby divya » Wed Sep 05, 2007 1:47 am

படம் : கர்ணன்
இசை : விசுவனாதன் ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்

என்னுயிர் தோழி கேளொரு சேதி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி
தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான்
தலைவன் என்றாயே................. தோழி..

(என்னுயிர்)

அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
அந்தபுரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ர வழக்கை தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்

(என்னுயிர்)

இன்றேனும் அவன் எனை நினைவானோ
இளமையை காக்க துணை வருவானோ
நன்று ! தோழி நீ தூது செல்வாயோ
நங்கையின் துயர சேதி சொல்வாயோ

(என்னுயிர்)
User avatar
divya
Valued Contributor
 
Posts: 423
Joined: Wed Oct 11, 2006 6:30 pm

Karnan

Postby revathi_malar » Tue Oct 23, 2007 8:43 am

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே
கால்கள் இங்கே நெளியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆஆஆ...

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித்
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு
ஏனிந்த மயக்கம் ஆஆஆஆஆஆஅ...
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே ஏஏஏஏஏஏஏ

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
இனமென்ன குலமென்ன
குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்
ஆஆஆஆஆஆஆ

குழுவினர்:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே

சுசீலா:
கண்டபோதே சென்றன அங்கே
குழுவினர்: கண்கள் எங்கே
User avatar
revathi_malar
Valued Contributor
 
Posts: 346
Joined: Sat Jan 13, 2007 3:33 am

Karnan

Postby Admin » Wed Jan 30, 2008 6:01 pm

பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணாவருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா
கர்ணாமன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
கர்ணா வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணாவருவதை எதிகொள்ளடா
User avatar
Admin
Admin
 
Posts: 2164
Joined: Sun May 07, 2006 5:21 pm
Location: Malaysia

Karnan

Postby Admin » Wed Jan 30, 2008 6:11 pm

படம்: கர்ணன்
பாடியவர்: பீ.சுசீலா

கண்ணுக்கு குலமேது
கண்ணுக்கு குலமேது.. கண்ணா
கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது.. கண்ணா
கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது

விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்கு இருளேது

கண்ணுக்கு குலமேது.. கண்ணா
கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது

பாலினில் இருந்து ஆஆஆஆஆஆ
பாலினில் இருந்து நெய் பிறக்கும் கண்ணா
பரம் பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்
அதில் மேல் என்றும் கீழ் என்றும் எங்கிருக்கும்

கண்ணுக்கு குலமேது.. கண்ணா
கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது

கொடுப்பவர் எல்லாம் ஆஆஆஆஆஆ
கொடுப்பவர் எல்லாம் மேலாவார்
கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது.. கண்ணா
கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
User avatar
Admin
Admin
 
Posts: 2164
Joined: Sun May 07, 2006 5:21 pm
Location: Malaysia

Karnan

Postby Admin » Wed Feb 13, 2008 8:56 am

Film: Karnan
Singer: PS, Chorus
Lyrics: Kannadasan
Song: Manjal Mugam Niram Maarai
Music: MSV

PS:
manjal mugam niram maari
mangai udal urumaari
konjum kilipol pillai uruvaanadhe

Chorus:
manjal mugam niram maari
mangai udal urumaari
konjum kilipol pillai uruvaanadhe

PS:
aanji aanji nadandhaal annalile
ival antha nadai thalarndhaal innalile

Chorus:
aanji aanji nadandhaal annalile
ival antha nadai thalarndhaal innalile

PS:
thulli vandha maan indru sei kondadhe
thulli vandha maan indru sei kondadhe

Chorus:
thulli vandha maan indru sei kondadhe
manjal mugam niram maari
mangai udal urumaari
konjum kilipol pillai uruvaanadhe

PS:
malargal sooti manjal kooti
valayal pooti thilagam theeti
maavindru vaazh endru vaazhthu paaduvom

Chorus:
malargal sooti manjal kooti
valayal pooti thilagam theeti
maavindru vaazh endru vaazhthu paaduvom

PS:
karnan thandha pillai endraal
kaar megam allava

Chorus:
karnan thandha pillai endraal
kaar megam allava

PS:
edhir kaalaththil indha desathil
avan karunai seivaan allava

Chorus:
avan karunai seivaan allava
malargal sooti manjal kooti
valayal pooti thilagam theeti
maavindru vaazh endru vaazhthu paaduvom
User avatar
Admin
Admin
 
Posts: 2164
Joined: Sun May 07, 2006 5:21 pm
Location: Malaysia

Re: Karnan

Postby stheepan78 » Thu Sep 09, 2010 5:55 pm

திரைப்படம்: கர்ணன்
பாடல் இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1547
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

KARNAN-GEETHOPADESAM--மரணத்தை எண்ணி

Postby balankamala » Wed May 14, 2014 6:02 pm

படம் : கர்ணன்
இசை : விசுவனாதன் ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்

மரணத்தை எண்ணி மனம் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை கொல்வேன்.
மானிடர் ஆன்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும்.
மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டுவிட்டாலும்
அவர்களின் மேனி சென்றுதான் தீரும் ஓர் நாள்

என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்

மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
துணிந்து நில் தர்மம் வாழ்க

புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால்
அந்த புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான்
கண்ணனே சாட்டினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
இக்களமெல்லாம் சிவக்க
வாழ்க …..
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய
சதுஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே
DR.K.K.SUBRAMANIAN.
balankamala
Cool Member
 
Posts: 51
Joined: Thu May 10, 2012 10:42 am
Location: india

Re: Karnan

Postby balankamala » Thu Feb 23, 2017 10:55 am

படம் : கர்ணன்
பாடல் : கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன் M.S
பாடல் : சவுந்தரராஜன் TM சுசீலா P
மகாராஜன் உலகை ஆளலாம் - இந்த
மகாராணி அவனை ஆளுவா..
ஆ..ஆ.. ஆள்
புலவர் பாட அரசர் கூட
அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணலாம்..

மகாராணி அவனை ஆளுவாள் - அதில்
மகாராஜன் மயங்கி ஆடுவா ஆ ஆ ஆ ன்
புலவர் பாட அரசர் கூட
அறிஞர் நாட வாழுவான்
புதுமை கூறும் மனைவி கண்ணில்
உலக இன்பம் காணுவான்

நான்கு பக்கம் திரைகள் ஆடும்
பாவலர் மஞ்சம் - அதன்
நடுவினிலே குடை பிடிக்கும்
காதலன் நெஞ்சம்.

மான் கொடுத்த சாயல் அங்கே
மயங்கிடும் கொஞ்சம் - அந்த
மயக்கத்திலே தலைவியிடம்
தலைவனே தஞ்சம்.. ம்.. ம்.

பாதத்தில் முகமிருக்கும்

பார்வை குனிந்து வரும்

வேகத்தில் லயித்திருக்கும்

வீரம் களைத்திருக்கும்
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
மகாராஜன் உலகை ஆளலாம்.

கண்ணனையும் அந்த இடம்
கலக்கவில்லையா?- இந்த
கர்ணனுக்கும் மட்டும் என்ன
இதயம் இல்லையா..?

வள்ளலுக்கு வள்ளல் இந்த
பெண்மை இல்லையா..? - எந்த
மன்னருக்கும் வழங்குவது
மனைவி இல்லையா.?

அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கும்

அந்தி பகல் துணையிருக்கும்

உண்ண உண்ண வளர்ந்திருக்கும்

உலகமே மறந்திருக்கும்
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..

மகாராஜன் உலகை ஆளலாம்

DR.K.K.SUBRAMANIAN.
balankamala
Cool Member
 
Posts: 51
Joined: Thu May 10, 2012 10:42 am
Location: india


Return to "K"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search