வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby iiyfn » Mon Oct 14, 2013 2:47 am

வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க..

சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் ஃபைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள ஃபைல்கள் மறைக்கப்பட்டுவிடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த ஃபைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் Properties சென்று பார்த்தால் ஃபைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த ஃபைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது..?

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த ஃபைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம். அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள்; ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள்.. உங்களுடைய ஃபைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

:smt063 :smt119
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6449
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby kpadsi » Mon Oct 14, 2013 3:03 am

Excellent!
Very useful. Thanx Nasseer!
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3336
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby jagadeeshc » Mon Oct 14, 2013 11:31 am

அன்பு நாசர் அவர்களே !

என்னிடம் உள்ள ஒரு Pen Drive வைரஸ் இருக்க
வாய்ப்பில்லை . நான் வீட்டிலே முக்கியமான fileகளை
சேமித்து வைத்திருந்தேன். இப்போது சிஸ்டத்தில்
போட்டுப் பார்த்தால் காலியாக இருக்கிறது .
en சிஸ்டத்தில் ஒரிஜினல் Virus Scanner உள்ளது .
எந்த files-ம் காண்பிக்கவில்லை. ஏனோ ?
Pen Drive அவ்வளவுதானா ?
என்றென்றும் அன்புடன்
ஜெகதீஷ்
"Music is enough for a lifetime, but a lifetime is not enough for music”
User avatar
jagadeeshc
Power Contributor
 
Posts: 1046
Joined: Sat Oct 29, 2011 12:44 pm
Location: கோவை, தமிழகம்

Re: வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby sravi » Mon Oct 14, 2013 12:44 pm

அன்பு சகோதர் திரு நாசர்
ஒரு ஜீபீ பென்ட்ரைவ் வெறும்40 எம்பீதான் காட்டுகிறது. இதுவும் சரி செய்யக்கூடியதா?
இனியது இனியது உலகம்
புதியது புதியது இதயம்

.
sravi
Power Contributor
 
Posts: 947
Joined: Mon Nov 07, 2011 9:16 am
Location: cuddalore tamilnadu

Re: வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby iiyfn » Mon Oct 14, 2013 4:32 pm

jagadeeshc wrote:அன்பு நாசர் அவர்களே !

என்னிடம் உள்ள ஒரு Pen Drive வைரஸ் இருக்க
வாய்ப்பில்லை . நான் வீட்டிலே முக்கியமான fileகளை
சேமித்து வைத்திருந்தேன். இப்போது சிஸ்டத்தில்
போட்டுப் பார்த்தால் காலியாக இருக்கிறது .
en சிஸ்டத்தில் ஒரிஜினல் Virus Scanner உள்ளது .
எந்த files-ம் காண்பிக்கவில்லை. ஏனோ ?
Pen Drive அவ்வளவுதானா ?

sravi wrote:அன்பு சகோதர் திரு நாசர்
ஒரு ஜீபீ பென்ட்ரைவ் வெறும்40 எம்பீதான் காட்டுகிறது. இதுவும் சரி செய்யக்கூடியதா?

1===> ஃபார்மட் 2===> ஃபைல் ரெக்கவரி.

Format செய்துவிட்டு பென்ட்ரைவை மீண்டும் உபயோக படுத்தலாம்.
Format செய்த பென்ட்ரைவில் இருந்து ரெக்கவரி செய்வதன் மூலம் அதில் இருந்த அனைத்து Files'களையும் திரும்ப பெறமுடியும்.

DOWNLOAD: USB_Recovery

:smt063 :smt119
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6449
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby jagadeeshc » Mon Oct 14, 2013 7:10 pm

அன்பு நாசர் !

உடனடி பதிலுக்கு நன்றி !

Pen Drive சிஸ்டத்தில் போட்டால் Removable Disk -இல்
காண்பிப்பதில்லை. அப்போது Pen Drive வொர்க்
ஆவதில்லை என்று தானே அர்த்தம் ....??

நன்றி !
என்றென்றும் அன்புடன்
ஜெகதீஷ்
"Music is enough for a lifetime, but a lifetime is not enough for music”
User avatar
jagadeeshc
Power Contributor
 
Posts: 1046
Joined: Sat Oct 29, 2011 12:44 pm
Location: கோவை, தமிழகம்

Re: வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby sravi » Mon Oct 14, 2013 7:33 pm

நன்றி திரு நாசர் அவர்களே
இனியது இனியது உலகம்
புதியது புதியது இதயம்

.
sravi
Power Contributor
 
Posts: 947
Joined: Mon Nov 07, 2011 9:16 am
Location: cuddalore tamilnadu

Re: வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby iiyfn » Mon Oct 14, 2013 7:49 pm

jagadeeshc wrote:அன்பு நாசர் !

உடனடி பதிலுக்கு நன்றி !

Pen Drive சிஸ்டத்தில் போட்டால் Removable Disk -இல்
காண்பிப்பதில்லை. அப்போது Pen Drive வொர்க்
ஆவதில்லை என்று தானே அர்த்தம் ....??

நன்றி !

உங்களது பென்ட்டிரைவ் வைரஸ் உள்ளதாக இருந்து, உங்களது Firewall, Malware System's நன்றாக வேலை செய்யக்கூடியதாக இருந்தால்... இப்படி வரும்.

அதற்க்கு சிறிது நேரம் உங்களது Antivirus> Setting;ல் சென்று Firewall, Malware சிஸ்ட்டத்தை (Just Stop)நிறுத்தி வைத்துவிட்டு சொருகி பாருங்கள். கிடைக்கும்.

அதன்பிறகும் வரவில்லை என்றால் மட்டும்மே.. உங்களது USB வேலை செய்யவில்லை என்ற முடிவுக்கு வரமுடியும்.

:smt063 :smt119
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6449
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: வைரஸ் தாக்கிய USB ‘பென்ட்ரைவ்’ இலிருந்து ஃபைல்களை மீட்க

Postby jagadeeshc » Mon Oct 14, 2013 8:21 pm

முயற்சித்துப் பார்க்கிறேன் .

நன்றி திரு நாசர் அவர்களே !
என்றென்றும் அன்புடன்
ஜெகதீஷ்
"Music is enough for a lifetime, but a lifetime is not enough for music”
User avatar
jagadeeshc
Power Contributor
 
Posts: 1046
Joined: Sat Oct 29, 2011 12:44 pm
Location: கோவை, தமிழகம்

Return to Computers, Internet and Technology

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron