< < < எமது கவிதைகள் > > >

< < < எமது கவிதைகள் > > >

Postby Pon.sellamutthu » Tue Aug 13, 2013 2:11 am

: : : : (ச)வரன்கள் : : : :

கரும்புதின்ன.....காசுகேட்கும்
கருணையற்ற...கயவர்கள்

விளக்கேற்ற.....வருபவளை
விலைபேசும்....வீணர்கள்

தாய்க்கொப்பாய்...வருபவளை
தரகுவழி..............தேடுவோர்கள் – வரனை

தந்தையாக்க....வருபவளை
சந்தைப்............படுத்தும்
விந்தை............மனிதர்கள்

இலட்சுமிக்கே.....இலட்சம்........கேட்கும்
இலங்கேஸ்........வரன்கள்

சக்தியைக்....கொண்டே
வாழ.............நினைக்கும்
சக்தியற்ற....சிவன்கள்என்றும் அன்புடன் . . கவிஞர் பொன்.செல்லமுத்து
User avatar
Pon.sellamutthu
Valued Contributor
 
Posts: 675
Joined: Thu Aug 16, 2012 8:01 pm
Location: VEEPPUR

Re: < < < எமது கவிதைகள் > > >

Postby iiyfn » Tue Aug 13, 2013 3:11 am

டியர் சார், அரும்மையான கவிதை. மிக்க மகிழ்ச்சி.! :cool:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6464
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: < < < எமது கவிதைகள் > > >

Postby jagadeeshc » Tue Aug 13, 2013 7:11 am

அன்பு கவிஞர் பொன் செல்லமுத்து அய்யா !

தங்களின் கவிதை மிக அருமை ! நன்றி !
என்றென்றும் அன்புடன்
ஜெகதீஷ்
"Music is enough for a lifetime, but a lifetime is not enough for music”
User avatar
jagadeeshc
Power Contributor
 
Posts: 1046
Joined: Sat Oct 29, 2011 12:44 pm
Location: கோவை, தமிழகம்

Re: < < < எமது கவிதைகள் > > >

Postby Pon.sellamutthu » Tue Aug 13, 2013 10:21 am

சுக்ரவதனீ குடும்ப உறவுகள்திரு. ஜெகதீஷ் , திரு. NAZAR
இருவருக்கும் அன்பு வணக்கம்.

எமது கவிதையை பாராட்டிய தாங்களிருவருக்கும் மிக்க நன்றி.

என்றும் அன்புடன் . . கவிஞர் பொன். செல்லமுத்து
User avatar
Pon.sellamutthu
Valued Contributor
 
Posts: 675
Joined: Thu Aug 16, 2012 8:01 pm
Location: VEEPPUR

Re: < < < எமது கவிதைகள் > > >

Postby Pon.sellamutthu » Tue Aug 13, 2013 11:24 am

. . . . . . . . . என்னவள் . . . . . . . . .


கண்ணவள். . . . .என்னவள் - கவிப்
பெண்ணவள். . . அன்னவள்
அன்றும் . . . . . . இன்றும்
என்றுமவள் . . . எம்மவள்

எழுத்தும் . . . . . அசையும்
சீரும் . . . . . . . . .தளையும்
அடியும் . . . . . . தொடையும்
அவளின் . . . . . அங்கங்கள்

தமிழவள் . . . . . தாலாட்ட
யாப்பவள் . . . . .சீராட்ட
அணியவள் . . . அழகூட்ட - எம்
கவிமங்கை . . . பொலிவுற்றாள்

சிலம்பவள் . . . . . . ஒலியினிலே - எம்
சிந்தையை . . . . . . பறிகொடுத்தோம் - அவள்
மணியும் . . . . . . . .மேகலையும் - எம்
மனதைமேலும் . . பறித்தன

இனிமையவள் . . .குரல்(றள்)தனிலே
எம்மையே . . . . . . மறந்துநின்றோம் - அவள்
அகநானூ . . . . . . . றரவணைக்கும்
புறநானூ . . . . . . . றுபொங்குமே(தொடரும்)


என்றும் அன்புடன் . . கவிஞர் பொன். செல்லமுத்து
User avatar
Pon.sellamutthu
Valued Contributor
 
Posts: 675
Joined: Thu Aug 16, 2012 8:01 pm
Location: VEEPPUR

Re: < < < எமது கவிதைகள் > > >

Postby Pon.sellamutthu » Mon Nov 11, 2013 7:39 pm

. . . .
/ / / திறமை / / /


சல்லடை . .தன்னிலே
தண்ணீரை.எடுத்திடலாம்
தண்ணீரை.பனிக்கட்டி
ஆக்கும் . . .திறமையினால்

அமிழும் . . இரும்பை
அகன்ற . . .தகடாக்கி
மிதக்கும் . கப்பலாக்கும்
மேன்மிகு. திறன்கொள்

தொழிலெனும். . நேர்முனையும்
திறனெனும் . . . .எதிர்முனையும்
இணைந்தால் . . ஒளிர்விடும்
செல்வமெனும் .மின்விளக்கு

நேர்வைத்து . . . சொன்னால்
ஏற்காத . . . . . . . கருத்துக்களை
சீர்வைத்து . . . . கவிதையென
ஏற்கவைக்கும் . திறன்கொள்

இமயம் . . . . . பரப்பளவு
எவர்திறன் . . .இருப்பினும்
ஏவெரெஸ்ட் . உயர்புகழ்
என்றும் . . . . .அவர்க்குண்டு


என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து
User avatar
Pon.sellamutthu
Valued Contributor
 
Posts: 675
Joined: Thu Aug 16, 2012 8:01 pm
Location: VEEPPUR

Re: < < < எமது கவிதைகள் > > >

Postby Pon.sellamutthu » Fri Mar 10, 2017 4:38 pm

*
ஜல்லிக் கட்டு – மல்லுக் கட்டு

தமிழினம் / தம்மண்ணில் / தொன்றுதொட்டு
தைத்திங்கள் / கண்டவீர / விளையாட்டு
காலசூழ் / நிலையின் / கண்பட்டு – நின்றன
காளைகள் கொட்டடி சிறைபட்டு

கொட்டடி / காளையதை / ஓடவிட்டு - அதன்
கொட்டம் / அடக்கிட / ஆசைப்பட்டு
தமிழ்காளை / கிளம்பின / மெனக்கெட்டு – அதை
தொலைக்காட்சி / காட்டின / புட்டுபுட்டு

தஞ்சைகோவை / மதுரையென / திசையெட்டு
தன்னார்வ / மனிதரெலாம் / தலையிட்டு
கண்டஅற / போராட்ட / புதுரூட்டு – உச்சமாய்
மெரினாவில் / குவிந்தது / பெருமுட்டு

காளைக்கு / வேண்டுமாம் / புல்லுக்கட்டு - இளங்
காளையர் / எங்களுக்கோ / ஜல்லிக்கட்டு
ஜல்தியில் / நடக்கணும் / ஜல்லிக்கட்டு
இன்னுமும் / ஏனையா / மல்லுக்கட்டுதிரைக்கலைச் செம்மல்
கவிஞர் பொன். செல்லமுத்து

*
User avatar
Pon.sellamutthu
Valued Contributor
 
Posts: 675
Joined: Thu Aug 16, 2012 8:01 pm
Location: VEEPPUR


Return to Tamil Kavithaigal

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search