by jillumaya » Sun Jan 24, 2016 12:58 pm
* ஆண்டவன் ஒருவனைக் கைவிடத் தீர்மானித்தால் சுண்டெலிகூட அவனைக் கடித்துவிடும்.
-ஹாலந்து
* ஆண்டவன் நிச்சயமாய் கரை சேர்ப்பான். ஆனால் புயல் வராதென்று உறுதி கூற மாட்டான்.
-சீனா
* கடவுள் அடிக்கடி நம்மிடம் வருகிறார். ஆனால், அந்த நேரங்களில் நாம் வீட்டில் இருப்பதில்லை.
-பிரான்ஸ்
* சவாரி செய்பவன்தான் மனிதன்; கடிவாளத்தைப் பிடித்திருப்பவன் கடவுள். -யூதர்
* புலியைப் படைத்ததற்காகக் கடவுளை நோக வேண்டாம். அதற்கு சிறகு அளிக்காமல் இருந்ததற்காக நன்றி கூறுங்கள். -ஆப்பிரிக்கா
* கடவுள் அருகிலிருந்தால் சிலந்தி வலையே சுவராகும். இல்லையென்றால் சுவரும் சிலந்தி வலையாகும். -இத்தாலி
* உண்மையான கோயில்கள் இதயத்தில் அமைந்துள்ளன. -லத்தீன்
* கடவுள் இல்லையென்றால் அவரை உண்டாக்கிக் கொள்வது அவசியம். -வால்டேர்
* ஆண்டவர் ஒரு கரத்தால் தண்டித்தாலும் மறு கரத்தால் அரவணைத்துக் கொள்கிறார். -யூதர்
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!
Loka Samastha Sukino Bawanthu!
நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)