அறிந்துக் கொள்வோம் !

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby vinothkumar » Wed Oct 29, 2014 11:06 am

இருக்கடை அல்வாவை பற்றி தெரியாத ஆச்சரியமான தகவல் நன்றி நாசர் சார்
vinothkumar
Active Member
 
Posts: 558
Joined: Wed Jul 25, 2012 12:02 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Wed Oct 29, 2014 7:02 pm

அறிந்துக் கொள்வோம் !


* பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்பகுதியை அடைய வேண்டும் எனில், இதைப் போல 500 மடங்கு துளையிட வேண்டும்.

* பூமித்தட்டுகள் எப்போதும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 2.5 சென்டிமீட்டர் தூரம். ஓராண்டில் நம் நகங்கள் வளர்வதும் ஏறத்தாழ இதே அளவுதான்!

* வெதுவெதுப்பான, சூரிய ஒளி நிறைந்த ஆழ்கடல் பகுதிகளிலேயே பவழங்கள் காணப்படுகின்றன.

* 6,690 கிலோமீட்டர் நீளம் கொண்ட, உலகின் மிக நீளமான நைல் நதியும் காலத்தின் கோலத்தில் சுருங்கி வருகிறது.

*உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகம் (டெல்டா) 77 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளால் உருவான இந்த டெல்டா, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பரவியுள்ளது.

* நிலவில் அமெரிக்கக் கொடி வைக்கப்பட்டிருந்தாலும், ஒரு போதும் அந்தக் கொடி பறப்பதில்லை. காரணம் காற்றின்மை!

* கலிபோர்னியாவிலுள்ள ஒரு செம்மரத்தின் அடிமரச் சுற்றளவு 24 மீட்டர். உயரம் 83 மீட்டர். இந்த பிரமாண்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், இம்மரத்துக்கு ‘ஜெனரல் ஷெர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான பிளாங்க்டன் கூட உயிரினமாகத்தான் பிறக்கிறது, மிகப்பெரிய ஆக்டோபஸும் கூட. நண்டு, நட்சத்திர மீன் போன்றவையும் பிறப்பால் சின்னஞ்சிறு உயிரிகளே!

*Echinoderm என்ற கடல்வாழ் குடும்பத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிக இனங்கள் உண்டு. ஆனாலும், அவற்றில் 5 முக்கியப் பிரிவுகள்தான். இக்குடும்பத்தின் பிரதான உயிரினம் நட்சத்திர மீன்!

*டைனோசரை விடவும் பல மடங்கு மிகப்பிரமாண்டமான உயிரினமான நீலத்திமிங்கலம், 33 மீட்டர் நீளம் வரை வளரும்.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Thu Oct 30, 2014 2:06 am

உலக இன்டெர்நெட் தினம்


மெயில், இன்டெர்நெட் இல்லாத வாழ்க்கையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, இன்டெர்நெட் கண்டறியப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிறது. 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29'ம் திகதி தான் இணையம் மூலம் முதல் முறையாக தகவல் அனுப்பப்பட்டது. அதுவும் இரு கணினிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு ARPANET மூலம் இது சாத்தியமானது. உலகின் முதல் கணினி நிறுவனமாக ARPANET திகழ்ந்தது. இந்த நிகழ்வு சரியாக 22.30 மணியளவில் நடைபெற்றது. கணினி மூலம் அனுப்பபட்ட முதல் தகவல் இது தான் “lo”, இந்த இரு வார்த்தைகளை அனுப்பியவுடன் அந்த கணினி க்ராஷ் ஆனது. இந்த அரிய நிகழ்வை தான் உலக இணையதள தினமாக அனுசரிக்கப்படுகிறது.

* இணையதளத்தில் 37% ஆபாசமாகவே உள்ளது.

* நாள் ஒன்றைக்கு 30,000 வெப்சைட்கள் ஹாக் செய்யப்படுகின்றன. :lol: :lol:

* இமய மலை போகும் பாதையில் தான் அதிவேக இன்டெர்நெட் உள்ளது.

* இணையதளத்தில் அதிக டிராபிக் ஏற்படுத்துவது கூகுள் மற்றும் மால்வேர்கள் தான்.

* அமெரிக்க ஊடகவியலாளர் இணையத்தில் போஸ்ட் செய்தமைக்காக 105 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்கிறார்.

* நாள் ஒன்றைக்கு 1,00,000.காம் டொமெயின்கள் பதிவு செய்யப்படுகின்றன.

* பிரிட்டனில் 9 மில்லியன் பேர் இணையத்தை பயன்படுத்தியதே கிடையாது.

* தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸில் தான் மிகவும் குறைவான இண்டெர்நெட் வேகம் இருக்கிறது.

* இணைய பயனாளிகள் நிமிடத்திற்கு 204 மில்லியன் மெயில்களை அனுப்புகின்றனர்.

* சீனாவில் கணினியை விட மொபைலில் இணையம் பயன்படுத்துவோர் அதிகம்.

* 70 சதவீத ஈமெயில்கள் Spam ஸ்பாம் கருதப்படுகின்றன.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Mon Mar 30, 2015 2:39 am

இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்கள்...

1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் + ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும் செயல்படும்.

2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி நிற்கும்.

அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து நிற்கும்.

3. daskeyboard.com எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில் இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.

4. google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.

5. data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title> என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய முடியும்.

6. இதே விஷயத்தை இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும். is below..


data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">

7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.

8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.

9. யு ஆர் எல் பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர் பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ் செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.

மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Tue Mar 31, 2015 7:33 pm

மார்ச் 31, 1889: ஈபில் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது

அளவில்லாத தன்ன நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான கஸ்டவ் ஈபில். இளம் வயதில் மிகவும் சுமாரான மாணவராக இருந்த மனிதருக்கு பொறியியல் சீட் கிடைக்கவில்லை. ஆர்ட்ஸ் பக்கம் கரை ஒதுங்கினார். பாலிடெக்னிக் பக்கம் நுழையலாம் என்றால் அதற்கு தகுதியில்லை என்று ஆசிரியர்கள் சொல்லிவிட்டார்கள். ரொம்பவும் கடினப்பட்டு தொழிற்பயிற்சி பெற்று வெளியே வந்தார்; பாலம் ஒன்றை கட்டுவதில் கலக்கி எடுத்தார். உலக வணிக பொருட்காட்சியில் கண்ணைக்கவர ஒரு கோபுரத்தை உருவாக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு கொடுத்தார்கள். அதற்கான உரிமையை இவர் பெற்று மாற்றங்கள் செய்தார்; இவர் சொதப்பி விடுவார் என சொன்னார்கள். அரசாங்கம் கேட்ட ஆறரை லட்சத்தில் கால்வாசியை தான் கொடுத்தது முதலைப்போட்டு கட்டி பின் இருபது வருடம் அதை கஷ்டப்பட்டு மக்களிடம் இருந்து வசூலித்தார்.

இன்னொரு கூட்டம் "கலை அழகு மிகுந்த பாரிசில் கருப்பு அசிங்கமாக அது இருக்க வேண்டுமா" என குரல் எழுப்பினார்கள்." அது பிரெஞ்சு புரட்சிக்கு நன்றி தெரிவிப்பதாக இருக்கும். இப்பொழுது வருகிற நூற்றாண்டை குறிக்கும்; பிரமிட் எகிப்துக்கு போல நமக்கு இது அமையும் "என்றார். இந்த அளவுக்கு நவீன வசதிகள் இல்லாத சூழலில் 300 வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தி வேலையை முடித்தார்கள். கட்டுமானத்தின் பொழுது ஒரே ஒரு நபர் தான் இறந்து போனார். ஈபில் பெயராலே அக்கோபுரம் எழுந்தது.

அமெரிக்கா விடுதலை பெற்று நூறு வருடம் ஆனதன் பொருட்டு ஒரு சிலையை பரிசளிக்க பிரெஞ்சு மக்கள் முடிவு செய்தார்கள். நிதி திரட்டுவது தான் சிக்கலாக இருந்தது. அமெரிக்காவில் பல்வேறு நாடகங்கள் மூலமும், புலிட்சர் பரிசு உருவாக காரணமான ஜான் புலிட்சர் தன் பத்திரிக்கையில் விளம்பரபடுத்தி நிதி சேர்த்தார். ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த நம் குஸ்தாவ் ஈபில் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்; பீடம் அமெரிக்காவில் வடிவமைக்கபட்டது; சிலை கப்பலின் மூலம் அமெரிக்கா வந்து சேர்ந்தது. முழுவதுமாக அல்ல; பாகம் பாகமாக கொண்டுவரப்பட்டு பின் இணைக்கப்பட்டது. பொறியியல் படிக்க லாயக்கில்லாதவர் என குறிக்கப்பட்ட ஈபில் கைவண்ணத்தில் சுதந்திர தேவி சிலை மற்றும் ஈபில் கோபுரங்கள் எழுந்து நிற்பது சுவையான முரண்.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Mon May 18, 2015 2:41 am

தெரிந்து கொள்வோம்.!

Image

* பன்னீர்ப் பூ இரவில் மலரும்.

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர்.

* ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார்.

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

* உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர்.

* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள்.

* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம்.

* ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர்.

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி.

* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா.

* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம்.

* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும்.

* ஒரு தொலைகாட்சி பெட்டியின் ஆயுள்காலம் 5,000 மணிநேரம்

* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச் சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கும் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது.

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது.

* உராங் உடான் என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர்.

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும்.

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது.

* துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர்.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Thu May 21, 2015 2:19 am

தெரிந்து கொள்வோம்


விமானம் பறப்பது எப்படி....?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது… இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்கள் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.


How-Airplane-Landing

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்


Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேக்கைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்.
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும். சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்.

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்...

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.!!!

ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிறியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும். உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின்தான்... சற்று மறைமுகமாக

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான். இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது, விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது!

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்) விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்கு தான் விஷயம் உள்ளது...

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும். அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவு உள்ளதாக இருக்கும்.

காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை தீர்மானிப்பது விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது விமானத்தின் இஞ்சின், விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது அதே இஞ்சின் தான்.

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது) இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் டேக் ஆஃப் ஆகிறது.

ஓடுதளம்... Runway...

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும்.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேல் இழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும்.

*மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது!

இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Sun Jun 14, 2015 8:02 pm

அறிந்துக் கொள்வோம் !


நீங்கள் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள்.
நீங்க உங்கள் வாகனத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும். மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.
நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும். திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம். அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம். அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும். ஆனால் நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள். மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.
ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் பொது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.
:lol: :thumright:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby aadhityaa » Sun Jul 05, 2015 8:02 am

Dear Mr Nazar
I really appreciate your continuous efforts in posting important infos/trivia in this thread. Thanks a million.
Regards
Aadhityaa
aadhityaa
Contributing Member
 
Posts: 267
Joined: Wed Jul 25, 2012 2:00 pm
Location: India

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Tue Jul 07, 2015 12:39 am

அறிந்துக் கொள்வோம் !


மனிதனின் கண் மிகவும் உணர்ச்சிமிக்க பகுதிகளில் ஒன்று. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நமது சாதாரண கண்ணால் 30 மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியினைக்கூட காண இயலும் என்பது தான். மேலும் சாதாரண கண்ணால் அதிகபட்ச தூரமாக ஆன்ட்ரோமேடா என்ற விண்மீன்கள் நிறைந்த விண்வெளிப்பகுதியினைக் கூட பார்க்க முடியும். இந்த ஆன்ட்ரோமேடா விண்வெளிப்பகுதி புவியிலிருந்து 2.6 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளது. இவ்வளவு தூரத்தினைக் கூட நமது வெறும் கண்ணாலே பார்க்க முடிகிறது என்பது வியப்பு!
இதில் ஆச்சரியங்கள் இருந்தாலும், இதற்கு சில வரைமுறைகளும் உண்டு. முப்பது மைலுக்கு அப்பாலுள்ள மெழுகுவர்த்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால், அந்தத் தூரம் முழுவதும் இருட்டாக இருக்கவேண்டும், மற்றும் பூமி தட்டையாக இருக்க வேண்டும் அல்லது நாம் ஒரு மலையின் உச்சியில் இருந்து அடர்ந்த இருட்டில் மெழுகுவர்த்தியை பார்க்க வேண்டும். இருந்தாலும் நமது கண் ஓர் அதிசயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
:thumright:

நமது கண்களின் சராசரி எடை 28 கிராம்.
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Tue Jul 07, 2015 12:51 am

அறிந்துக் கொள்வோம் !

1. மெர்குரி - புதன் கோள் சூரியனிலிருந்து 5,80,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது.
2. வீனஸ் - வெள்ளி கோள் சூரியனிலிருந்து 10,08,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது.
3. மார்ஸ் - செவ்வாய் சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
4. ஜூபிடர் - வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
5. சாட்டர்ன் - சனி கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
6. யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
7. நெப்டியூன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
8. புளூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
:thumright:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby iiyfn » Tue Jul 07, 2015 1:19 am

அறிந்துக் கொள்வோம் !

இந்தியாவின் அணைகளும் மாநிலங்களும்;-

1. நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக பயன்படுகிறது.

2. கக்கார்பாரா நீர்த்தேக்கம் ஆந்திர மாநிலம் தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது.

3. கோஷி நீர்த்தேக்கம். பீகார் மாநிலம் கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித் திட்டத்துக்கும் இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது.

4. சபரிகிரி நீர்த்தேக்கம். கேரள மாநிலம் பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது.

5. சாராவதி நீர்த்தேக்கம். கர்நாடக மாநிலம் ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது.

6. மகாநதி டெல்டா நீர்த்தேக்கம். ஒரிசா மாநிலம் மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது.

7. பக்ராநங்கல் நீர்த்தேக்கம். ஹிமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது.

8. தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம். ஜார்க்கண்ட் மாநிலம் தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும், விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது.

9. சர்தார் சரோவர் நீர்த்தேக்கம். மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது.

10. மேட்டூர். தமிழ்நாடு, காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது. ஆனால் நீரை கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டி உள்ளது.
:thumright:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby rvrdevi » Mon Oct 26, 2015 2:26 pm

Bananas

This is interesting. After reading this, you'll never look at a banana
in the same way again.
Bananas contain three natural sugars - sucrose, fructose and glucose
combined with fiber. A banana gives an instant, sustained and
substantial boost of energy.
Research has proven that just two bananas provide enough energy for a
strenuous 90-minute workout. No wonder the banana is the number one
fruit with the world's leading athletes.
But energy isn't the only way a banana can help us keep fit. It can
also help overcome or prevent a substantial number of illnesses and
conditions, making it a must to add to our daily diet.
DEPRESSION
According to a recent survey undertaken by MIND amongst people
suffering from depression, many felt much better after eating a
banana. This is because bananas contain tryptophan, a type of protein
that the body converts into serotonin, known to make you relax,
improve your mood and generally make you feel happier.
PMS:
Forget the pills - eat a banana. The vitamin B6 it contains regulates
blood glucose levels, which can affect your mood.
ANEMIA
High in iron, bananas can stimulate the production of hemoglobin in
the blood and so helps in cases of anemia.
BLOOD PRESSURE:
This unique tropical fruit is extremely high in potassium yet low in
salt, making it perfect to beat blood pressure So much so, the US Food
and Drug Administration has just allowed the banana industry to make
official claims for the fruit's ability to reduce the risk of blood
pressure and stroke.
BRAIN POWER
200 students at a Twickenham school ( England ) were helped through
their exams this year by eating bananas at breakfast, break, and lunch
in a bid to boost their brain power. Research has shown that the
potassium-packed fruit can assist learning by making pupils more
alert.
CONSTIPATION
High in fiber, including bananas in the diet can help restore normal
bowel action, helping to overcome the problem without resorting to
laxatives.
HANGOVERS
One of the quickest ways of curing a hangover is to make a banana
milkshake, sweetened with honey. The banana calms the stomach and,
with the help of the honey, builds up depleted blood sugar levels,
while the milk soothes and re-hydrates your system.
HEARTBURN
Bananas have a natural antacid effect in the body, so if you suffer
from heartburn, try eating a banana for soothing relief.
MORNING SICKNESS
Snacking on bananas between meals helps to keep blood sugar levels up
and avoid morning sickness.
MOSQUITO BITES:
Before reaching for the insect bite cream, try rubbing the affected
area with the inside of a banana skin. Many people find it amazingly
successful at reducing swelling and irritation.
NERVES
Bananas are high in B vitamins that help calm the nervous system..
Overweight and at work? Studies at the Institute of Psychology in
Austria found pressure at work leads to gorging on comfort foodlike
chocolate and chips. Looking at 5,000 hospital patients, researchers
found the most obese were more likely to be in high-pressure jobs. The
report concluded that, to avoid panic-induced food cravings, we need
to control our blood sugar levels by snacking on high carbohydrate
foods every two hours to keep levels steady.
ULCERS
The banana is used as the dietary food against intestinal disorders
because of its soft texture and smoothness. It is the only raw fruit
that can be eaten without distress in over-chroniclercases. It also
neutralizes over-acidity and reduces irritation by coating the lining
of the stomach.
TEMPERATURE CONTROL
Many other cultures see bananas as a 'cooling' fruit that can lower
both the physical and emotional temperature of expectant mothers. In
Thailand , for example, pregnant women eat bananas to ensure their
baby is born with a cool temperature.
So, a banana really is a natural remedy for many ills. When you
compare it to an apple, it has FOUR TIMES the protein, TWICE the
carbohydrate, THREE TIMES the phosphorus, five times the vitamin A and
iron, and twice the other vitamins and minerals.. It is also rich in
potassium and is one of the best value foods around So maybe its time
to change that well-known phrase so that we say,
'A BANANA a day keeps the doctor away!'
அன்புடன்
ஆர்.வி.ராஜு​
User avatar
rvrdevi
Active Member
 
Posts: 561
Joined: Mon Mar 31, 2014 1:18 am
Location: Madurai

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby rvrdevi » Mon Oct 26, 2015 2:29 pm

14 Convenient Uses for Cinnamon
Cinnamon is one of the world's oldest spices, that imparts a magnificent aroma to a wide variety of foods. But, besides its great taste and smell, cinnamon is also considered to have quite a variety of healing properties too. Many of its benefits derive from the spice's antifungal, antibacterial and antioxidant prowess. You can smell it, ingest it, or apply it, either way, the health benefits of cinnamon are more than skin deep. These top 14 tips will get you going, and in the process, you may also be surprised to discover that this great spice has all kinds of ingenious uses too! 

In the Know: Learn to Identify Real Cinnamon 
Before getting to its uses, here's a fact you may want to consider. Much of the cinnamon available  is not real cinnamon (Cinnamon Verum or Cinnamomum Zeylancium), it is Cassia. Cassia contains substances that have strong anticoagulant properties, which may be harmful to the liver when consumed in large quantities. It is easier to spot the difference between the two when buying cinnamon sticks. Though, it is a lot harder to identify real cinnamon in its powder form. 
Here's how to spot the difference:
· Cinnamon is a paler tan brown, as opposed to the reddish rust brown of cassia.
· Cinnamon has a thin, paper-textured bark that forms multiple thin layers when rolled up. Cassia bark is thicker, forming just a few layers.
· Cinnamon is more fragile, and can crumble a lot easier than cassia which is tough and a lot harder to grind.
· Cinnamon has a delicate, sweeter aroma, whereas cassia is more pungent and full-bodied.
· Cinnamon is very expensive in comparison to cassia, and it is a lot harder to obtain. 
Nevertheless, it is important to note that there are no dramatic nutritional differences between the two and to actually notice thedifference, you would need to consume it in large amounts.  

1. Use it Boost your Brain Power 
Studies show that smelling cinnamon boosts cognitive function and memory. It is the perfect spice to use when you are feeling out of focus. Carry a stick around with you and take a whiff every now and then. Alternatively, every morning, add a couple of dashes to your coffee or cereal - this will start your day off on a good note and will help you stay more focused and alert. 
2. Enhance the Aroma in your Home - Use it in Potpourri  
Sprinkle a couple of drops of cinnamon essential oil atop dry potpourri and place it in a small bowl, preferably somewhere that gets good ventilation - allowing the aroma to spread in the kitchen, near doorways , or atop the radiator. The room will carry with it a subtle hint of cinnamon, providing you with some year-round comfort. 
3. Use it to Reduce Cholesterol 
In a study conducted by the Beltsville Human Nutrition Research Center, over a period of 40 days on a group of diabetic patients, each was given one-quarter of a teaspoon of cinnamon daily, researchers observed that their triglycerides, cholesterol and LDL (bad) cholesterol levels dropped. 
4. Use it to Repel Moths 
Cinnamon is great at warding off pesky moths. Just break 3 to 4 cinnamon sticks and combine them with 1/2 cup of whole cloves and 1/2 cup whole black peppercorns. Fill sachets with 1 tablespoon of the mixture and toss the sachets in your underwear drawer or hang them in your closets.

5. Use it to Treat Diabetes 
The Beltsville Human Nutrition Research Center also conducted a study on diabetic patients. In this study, the diabetic patients were given one-quarter of a teaspoon of cinnamon over 40 days, after which, researchers observed that patients' blood sugar levels fell by as much as 30 percent. In another study, published by Fertility and Sterility in 2007, researchers gave half of their participants cinnamon extract, and the other half, a placebo. In 8 weeks, the women who took the cinnamon extract showed greatly reduced insulin, in comparison to the placebo group. 
6. Use it to Promote Weight Loss 
Due to cinnamon's effectiveness in reducing insulin resistance, research by the Human Nutrition Center at Tufts reports that cinnamon triples insulin's capacity to metabolize blood sugar. Therefore, the spice can reduce hunger and sugar cravings - leading to weight loss. Cinnamon is a particularly useful ingredient to have for anyone living with diabetes and finding it difficult to lose weight.  
7. Use it to Boost your Circulation 
One of the health benefits of cinnamon is that it can be used to thin the blood, which in turn increases circulation throughout the body. This helps to reduce pain in troubled areas as well as supply oxygen to the blood cells. It is also a great dietary complement for heart attack survivors.  
8. Use it to Reduce Arthritis Pain 
A 2008 study, published in the journal Bioorganic and Medicinal Chemistry, researchers discovered that cinnamon slowed the breaking down of bones, ultimately reducing bone damage.  
9. Use it as a Light Bulb Diffuser 
As odd as it may seem, cinnamon can be used as a light bulb diffuser to bring its scent to a room. All you need to do is add one drop of cinnamon essential oil on a cool light bulb. When you turn the lights on, the heat from the bulb will emanate the aroma throughout the room. 
10. Use it to Treat Bladder Infections 
Consuming cinnamon will reduce (or help you avoid) urinary tract infections and bladder infections. Cinnamon packs an anti-bacterial and antifungal punch, and it is also a diuretic, contributing to urinary discharge.
11. Use it to Treat Insect Bites 
To help alleviate the pain and itching of an insect bite, apply a mixture of cinnamon and honey. The duo will disinfect the infected area, moisturize the skin and heal it. 
12. Use it to Relieve Cold and Flu
This use of cinnamon is pretty well known, especially across East Asia and Europe. To treat a cold or flu, it is usually combined with ginger.
13. Use it to Sooth Stomach Pain
To relieve a stomachache, combine honey and cinnamon. These two ingredients are packed with antifungal and antibacterial properties, helping to treat ulcers, as well as reducing gas in the stomach. 
14. Use it to Prevent Food from Spoiling
Adding cinnamon helps to prevent the spoiling of food. It does so by delaying bacterial growth.
அன்புடன்
ஆர்.வி.ராஜு​
User avatar
rvrdevi
Active Member
 
Posts: 561
Joined: Mon Mar 31, 2014 1:18 am
Location: Madurai

Re: அறிந்துக் கொள்வோம் !

Postby rvrdevi » Mon Oct 26, 2015 2:33 pm

பயனுள்ள 100 இயற்கை மருத்துவ குறிப்புகள்…

1. காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகைகள், சோயா, காளான், (நாட்டு கோழி) முட்டைகள் போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் காலையில் ஒரு கப் (நாட்டு பசு) பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க நெல்லிக்கனி, எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாதுளம், கொய்யா, குடை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், இஞ்சி, மிளகு, மஞ்சள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு..!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை பதிலாக, பேரீச்சை, கீரைகள் மற்றும் சிகப்பு நிற பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் என இரும்பு சத்து நிறைந்த உணவுகளாக அதிகம் சாப்பிட வேண்டும்.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் பழங்கள் (ஜூஸாக்காமல்) முளை கட்டிய தானியங்கள், பயிறுகள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின், வயிற்று தசைகள் வலுப்பெற எளிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. முடிந்தவரை நடைபயிற்சி நல்லது.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெய் உணவுகளை தவிர்த்து, பச்சை தேங்காய், அவித்த வேர்க்கடலை, எள்ளுருண்டை சாப்பிட வேண்டும். நார்ச்சத்து உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை (வெள்ளை சீனி), கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. வெள்ளை சீனியை அனைவரும் தவிர்க்க வேண்டும். நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும். தாய் பாலை தவிர எதுவும் கொடுக்க கூடாது...

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள். உணவே மருந்து….! விருப்பம் இல்லாமல் உண்ண கொடுப்பது தவறு...

உணவே மருந்து...

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுவது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு சிகப்பு நிற பழங்கள், காய்கறிகள்... புடலங்காய், பீட்ரூட், கீரைகள் (முருங்கைக்கீரை) அவரை, உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்து, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, கற்றாழை, வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 இஞ்சி, பூண்டு, வெங்காயம், சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் நெருங்காது, மூல நோய் தணியும்.

42. சமையலுக்குக் கைக்குத்தல் சிகப்பு அரிசியை பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும், வயிற்றுக்கும் நல்லது.

45. உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

மருந்தே வேண்டாம்...

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி சரியான உணவுகளும், முறையான உண்ணும் பழக்கமும் நடைபயிற்சியும் தான்...

இருதய ஆரோக்கியத்துக்கு...!

53. பீட்டா காரோட்டீன்ஸ் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, செம்பருத்தி பூ, கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. எண்ணெய்கள் இதயத்துக்கு எதிரானது. பச்சை தேங்காய், எள், ஆளி விதை, பாதாம், போதிய அளவில் அவித்த வேர்க்கடலை போன்ற நல்ல கொழுப்பு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

56. மன அழுத்தம், கோபம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. முடிந்தவரை சிரியுங்கள்...

கிட்னியைக் கவனியுங்கள்…

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக் போன்றவை, இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

60. போதிய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு பழங்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வாழைத்தண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி…!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி, மிகவும் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட உடனே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்...

66. எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

சருமம்...

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான சரியான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் போதிய அளவுக்கு குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவதில் மீன் சாப்பிடலாம்.

73. எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்...

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எனவே, ஆன்டி ஆக்ஸிடன்ட், விட்டமின் சி, புரொபயோட்டிக் உணவுகளை அதிகம் உண்ணவும்...

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்...

78. எமர்ஜென்சியான நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் ஆங்கில மருந்துகளை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்...

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… நாட்டு பசுவின் மோர் குடிப்பது, வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது சீரகம் சாப்பிட்டால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும். வியர்வை நன்றாக காய்ந்த பின்பு குளித்து விட வேண்டும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல், ஒரே இடத்தில் அமர்ந்திருந்து இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு.
அது தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

நோயாளிகள் தங்கும் இடம்...

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்கு பதிலாக கெடுதலையே தரும்.

98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது...
அன்புடன்
ஆர்.வி.ராஜு​
User avatar
rvrdevi
Active Member
 
Posts: 561
Joined: Mon Mar 31, 2014 1:18 am
Location: Madurai

Previous

Return to General Knowledge

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search