மைசூர் போண்டா!

மைசூர் போண்டா!

Postby jillumaya » Thu Aug 01, 2013 9:47 pm

தேவையான பொருள்கள்:

உளுந்து = 1 கப்
கடலைப்பருப்பு = 1 கப்
மிளகு = 1 ஸ்பூன்
தேங்காய் = 1 துண்டு
இஞ்சி = சிறிய துண்டு
பெருங்காயம் = சிறிதளவு
கடலை எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவுசெய்முறை:

உளுந்து, கடலைப்பருப்பு இரண்டையும் நன்றாக ஊற வைத்து கொள்ளவும். நன்றாக ஊறியதும் தோல் இல்லாமல் கழுவி நீரை வடித்து விட்டு நீர் விடாமல் பஞ்சு போல அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு கடலைப்பருப்பையும் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். இரண்டு மாவையும் கலந்து கொள்ளவும்.
பிறகு இதனுடன் மிளகு, தேங்காய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறிய உருண்டையாக உருட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இதை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான, ஆரோக்கியமான மைசூர் போண்டா தயார். இதை தேங்காய் சட்னியோடு பரிமாற சுவையாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

உளுந்தில் புரதம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து ஆகியவை காணப்படுகிறது. குறைந்த அளவு கொழுப்பு காணப்படுகிறது. மேலும் வைட்டமின் “சி” நிறைந்துள்ளது. உடல் சதை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த உதவும். வாத கோளாறுகளை கட்டுப்படுத்தும்.

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3838
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Return to Samaiyal

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron