தினம் ஒரு திருக்குறள் - பொழிப்புடன்!

Re: திருக்குறள்

Postby heezulia » Fri Apr 14, 2017 2:26 am

இந்தப் பக்கம் வந்து ரொம் .................... ப நாளாச்சுல்ல?

1. அறத்துப்பால்
2. இல்லறவியல் 14. ஒழுக்கமுடைமை
=============================================
133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.


பதவுரை : குடிமை - உயர்ந்த குலத்தில் இருப்பார்
இழுக்கம் - ஒழுக்கத்திலிருந்து தவறுவது


பொருள் : ஒவ்வொருத்தங்க என்ன சொல்லிக்குவாங்கன்னா, நான் உயர்ந்த குலத்துல பொறந்திருக்கேன், உயர்ந்த குலத்துல பொறந்திருக்கேன்னு பெரூ ........................ சா பீத்திக்குவாங்க. ஆனா அவங்க நடந்துக்கிறத பாத்தா ? ஒழுக்கமா நடந்துக்க மாட்டாங்க. நடத்தை நல்லா இருக்காது. பின்ன, உயர்ந்த குலத்திலே பொறந்து என்ன யூஸ்? இல்ல என்ன யூஸுங்கிறேன். ஒழுக்கமில்லாம அவன் வாழுறான்னாக்கா, அவன் இழிந்த குலத்துல பிறந்தவன் போலாகிடுமாம். இப்படித்தாங்க நம்ம தாத்தா சொல்லியிருக்காருங்க. அதுபோல இழிந்த குலத்திலே பிறந்த ஒருத்தன் நல்ல ஒழுக்கமானவனா இருந்தா, அவன் உயர்ந்த குலத்தில பிறந்தது போல இருப்பானாம். என்னவோ சொல்லியிருக்கார். அதை நானும் சொல்லிட்டேன்.

ஆக மொத்தத்தில, ஒழுக்கமுள்ளவனாக இருக்கிறது நல்ல குடியில பிறந்திருக்கான் என்பதற்கு அடையாளமாம். அவ்வொழுக்கத்திலிருந்து தவறினாக்கா தாழ்ந்த இழிதொழில் பிறவியானவன் என்பதாக்கிவிடுமாம். இதிலே இருந்து என்னா தெரீதூன்னா ...................... ஒழுக் ................... கமா இருக்கோணும். அம்புட்டுத்தான்.


ஹீ zuலியா :queen:
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1516
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re : திருக்குறள் - 1. 2. 14. 134

Postby heezulia » Mon May 29, 2017 3:58 am

எல்லோரும் நல்லா இருக்கீங்களா ............................... ? எல்லா ...................................... ருக்கும் கேட்டுச்சா ........................................ ?

1. அறத்துப்பால்
2. இல்லறவியல் 14. ஒழுக்கமுடைமை
=============================================
134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பதவுரை :
ஓத்து கொளலாகும் - பின்பு கற்றுத் தெரிந்து கொள்ளலாம்
பார்ப்பான் - பிராமணன்
பிறப்பு ஒழுக்கம் - பிறப்புக்கு சிறப்பு சேர்க்கும்
ஒழுக்கம்
குன்ற - தவறினால்


பொருள் : படிச்ச படிப்பு மறந்துட்டா, அப்புறமா அதை படிச்சு தெரிஞ்சுக்கலாம். அது முடியும்தானே. மறந்துருச்சேன்னு கவலைப்பட வேண்டிய அவசியமுமில்ல. இது மாதிரிதாங்க, பிராமண குலத்தை சேர்ந்த ஒருத்தன் அவன் படிச்ச வேதத்தை மறந்துட்டான்னு வச்சுக்கோங்க, மறுபடியும் அவன் அதை கத்துக்கிட்டு, மறந்து போனதை ஞாபகபடுத்துக்கிலாம்ல ? அது ஒரு பெரிய விஷயமே இல்ல. சரிதானே? ஆனா அவன் ஒழுக்கம் தவறிட்டான்னாக்கா, அவன மாதிரி கேவலமானவன் யாருமில்லன்னு தாத்தா சொல்றாருங்கோ. ஆமாங்க, ஒரு அந்தணன் நடத்தை கெட்டவனா இருந்தான்னா, அவன் பிறப்புக்கே இழுக்காயிருமாம்.

ஆக மொத்தத்தில, கற்ற வேதத்தை மறந்தாட்டாலும் மீண்டும் அதனை ஓதி படிச்சுக்கலாம். ஆனா வேதம் ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் தவறினா கெடு்ம். அம்புட்டுத்தான்.

எனக்கு ஒரு சந்தேகம். இது எல்லாருக்குதானே பொருந்தும் ?


ஹீzuலியா
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1516
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re: திருக்குறள் : 1.2.14.135

Postby heezulia » Wed Mar 07, 2018 2:23 am

06.03.2018

என்ன.............. எல்லாரும் எப்டி இருக்கீங்க? சௌக்கியம்தானா? ரொம்ப நாளைக்கப்புறம், கிட்டத்தட்ட ஒம்போ..............து மாசங்களுக்கு அப்புறம் வந்திருக்கேன். இனிமே தொடர்ந்து வரணும்னு நெனச்சிருக்கேன்.

1. அறத்துப்பால்
2. இல்லறவியல் 14. ஒழுக்கமுடைமை
=============================================
135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பதவுரை : அழுக்காறு – பொறாமை
உடையான்கண் – இருப்பவனிடம்
ஆக்கம்போன்று – செல்வம் போல
ஒழுக்கமிலான்கண் – ஒழிக்கம் இல்லாதவனிடம்
உயர்வு – வாழ்வில் உயர்ந்த நிலைமை


பொருள் :பக்கத்து வீட்டுக்காரங்களோ, பிரெண்ட்ஸோ, கூட பொறந்தவங்க கூட, நல்லா இருந்துட்டா போதும். பொறுக்....................காதே. பொறாமையில காதுல புகை வரும், இல்லேனா வயிற்றில எரிச்சல் வந்துரும். இது மட்டுமா? சின்ன புள்ளைங்களுக்கும் இதை சொல்லலாம். கூட படிக்கிறவன் தன்னைவிட அதிக மார்க் வாங்கிற கூடாது. வாஷிங் பௌடர்க்கு TVல ஒரு ad. போடறாங்க. “என் சட்டையைவிட அதிக வெண்மையா?”ன்னு, வெள்ளை சட்டையை பாத்துகிட்டே....................... போயி, எங்கேயோ போய் இடிச்சுகிறது.

இப்படியாக பொறாமை பட்றவங்க பொறாமை பட்டுகிட்டு இருக்காங்க. இவங்க சந்தோஷமாவா இருப்பாங்க? இல்லியாம். இவங்கள்ட்ட செல்வம் நிக்காதாம். அப்டியா? பொறாமை பட்றவங்ககிட்ட பணம் இருக்காதா? பொறாமை படக்கூடாதுங்கறதுக்காக தாத்தா இப்டி சொல்லியிருப்பாரோ?

இதே மாதிரிதாங்க வாழ்க்கையில ஒழுக்கம் இல்லாதவங்களும். நடத்தை சரியில்லாதவங்களை மத்தவங்களுக்கு புடிக்குமா, மதிப்பாங்களா, இல்லேல்ல? ஜனங்கள் வெறுப்பாங்க. ஒழுக்கம் கெட்டவங்க நிம்மதியா இருக்க முடியுமா? அதுவும் இல்ல. மத்தவங்க அவங்களை திட்டிட்டே இருப்பாங்க. இவங்க வாழ்க்கையில உயரவே முடியாதாம்.

ஆக மொத்தத்தில, பொறாமை இருக்கிறவன்ட்ட செல்வம் நிலைத்து நிக்காதது போல, நடத்தை கெட்டவங்ககிட்ட, வாழ்க்கையில உயர்வான நிலை இருக்காது.

Heezulia :smt024
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1516
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re: தினம் ஒரு திருக்குறள் - பொழிப்புடன்!

Postby jillumaya » Sat Mar 10, 2018 11:08 pm

1. அறத்துப்பால்
2. இல்லறவியல் 14. ஒழுக்கமுடைமை


குறள் 136

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து


விளக்கம்

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை

உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்!
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: திருக்குறள் - பொழிப்புடன்!

Postby heezulia » Sat Mar 31, 2018 7:14 pm

31.03.2018

சினிமா சம்பந்தமாவே............................................... எழுதிட்டு இருக்கேனா, இங்க வர மறந்தே போவுது.

1. அறத்துப்பால்
2. இல்லறவியல் 14. ஒழுக்கமுடைமை
=============================================
137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.


பதவுரை : ஒழுக்கத்தின் – ஒழிக்கமாய் வாழ்பவர்
எய்துவர் – அடைவார்கள்
இழுக்கத்தின் – கெட்ட வழியில் நடப்பவர்கள்
எய்தாப் பழி – யாரும் அடையாத பழி


பொருள் : வாழ்க்கையில ஒழுக்கமுள்ளவங்களா வாழணும். அதுதானே எல்லாருக்கும் நல்லது. இல்லியா? அப்பதானே மத்தவங்க நம்மள மதிப்பாங்க. அதனால நமக்கு நல்ல வாழ்வும், நல்ல பேரும் கிடைக்கும். நம்மை உயர்வா பேசுவாங்க. ஆனா ஒழுக்கத்தில் இருந்து தவறி வாழ்பவங்களுக்கு? வாழ்க்கையில அவமானமும், அதனால அவங்களுக்கு கெட்ட பேர். வேண்டாத பழிக்கு ஆளாவாங்க.

ஆக மொத்தத்தில, ஒழுக்கமுள்ளவங்க நல்லபடியா வாழலாம். ஒழுக்கமா வாழாதவங்களுக்கு பெரும்பழி வந்து சேரும்.

Heezulia :smile:
Last edited by heezulia on Mon Apr 02, 2018 5:40 pm, edited 1 time in total.
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1516
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re: தினம் ஒரு திருக்குறள் - பொழிப்புடன்!

Postby vcsics » Sat Mar 31, 2018 11:02 pm

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

நான் ஏறுகிற பஸ்ஸிலெல்லாம் இதே குறள்..
அங்கும் படிச்சேன் இப்போது இங்கும் படிச்சேன்.
இப்படிக்கு உங்கள் அன்பன் VCS(V.Chinnaswamy)
User avatar
vcsics
Power Contributor
 
Posts: 1309
Joined: Tue Nov 08, 2011 9:12 am
Location: Chennai India

Re: திருக்குறள் - பொழிப்புடன்!

Postby heezulia » Sun Apr 01, 2018 6:52 am

01.04.2018

படிச்சிட்டீங்களா? நன்றி சின்னசாமி சார்.

1. அறத்துப்பால்
2. இல்லறவியல் 14. ஒழுக்கமுடைமை
=============================================
138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்


பதவுரை : நன்றிக்கு – நல்லது நடக்கிறதுக்கு
வித்தாகும் – விதையாக இருக்கும்
இடும்பை – துன்பம்


பொருள் : தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். இப்டி ஒரு பழமொழி இருக்குல்ல. இந்த பழமொழியை இந்த திருக்குறள் கொஞ்சம் வேற மாதிரி சொல்லுது. நல்ல ஒழுக்கத்தோடு வாழ்றது நல்லதுதானே. அப்படி வாழ்ந்தால், அவன் வாழ்க்கையில் நல்லது நடக்க விதை விதைத்தது போலவாம். அதனால அவனுக்கு நன்மை மட்டுமே விளையும். அப்டி இல்லாம, நடத்தை சரியில்லேன்னா, அது அவனுக்கு எப்போதுமே துன்பத்தைத்தான் கொடுக்கும்.

ஆக மொத்தத்தில, ஒழுக்கமாக வாழ்ந்தால் நன்மை கிடைக்கும். இல்லேன்னா வாழ்க்கையே தீராத துன்பம்தான்.

Heezulia :smile:
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1516
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re: தினம் ஒரு திருக்குறள் - பொழிப்புடன்!

Postby kpadsi » Sun Apr 01, 2018 9:13 am

திருவள்ளுவர் இப்போ உயிரோட இருந்தாருன்னா இப்படியெல்லாம் எழுதவே மாட்டார்.

அபூர்வமாக நேர்மையோடும் ஒழுக்கத்தோடும் இருக்கறவங்க கஷ்டப்படுவதும் ,ஒழுக்கமில்லாத அரசியல் தலைவனுங்க கொடி கட்டி பறக்கிறதும் இப்போ நடக்குதே.

ஒரு பழைய பாடலின் வரிகள் நினைவுக்கு வருது. இப்போவும் பொருத்தமாக இருக்கு. அது என்னன்னா ". குலமகள் ராகி கூழு குடிக்கறா . கூறு கெட்டு போனவ கும்மாளம் போடுறா " என்பதுதான் அவ்வரிகள்.

திரிபுரா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து கையில் காசில்லாமல் ஏழையாக தேர்தலில் தோற்று வெளிவந்த மாணிக் சர்க்காரின் பெயர் நினைவுக்கு வருது.
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3347
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: திருக்குறள் - பொழிப்புடன்!

Postby heezulia » Sun Apr 01, 2018 3:18 pm

01.04.2018
kpadsi wrote:திருவள்ளுவர் இப்போ உயிரோட இருந்தாருன்னா இப்படியெல்லாம் எழுதவே மாட்டார்.
ஏற்கனவே அவர்தான் எதுதிட்டாரே. மறுபடியும் அவர் ஏன் எழுத போறார். இதை நீங்க எந்த அர்த்தத்தில எழுதினீங்கன்னு தெரியல.

Heezulia :smile:
Last edited by heezulia on Mon Apr 02, 2018 5:40 pm, edited 1 time in total.
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1516
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re: திருக்குறள் - பொழிப்புடன்!

Postby heezulia » Sun Apr 01, 2018 10:44 pm

01.04.2018

1. அறத்துப்பால்
2. இல்லறவியல் 14. ஒழுக்கமுடைமை
=====================================
139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

பதவுரை : ஒல்லாவே – முடியாது
தீய – தகாத வார்த்தைகள்
வழுக்கியும் – தப்பி தவறி கூட
சொலல் – சொல்லுவது


பொருள் : ஒழுக்கமாய் வாழறவங்க மனசு நல்ல பக்குவப்பட்டிருக்கும். அதனால அவங்க எந்த கெட்டதையும் செய்யமாட்டாங்க. கெட்டதுன்னா, மத்தவங்க மனசு கஷ்டப்படும்படியா எதையும் பேசமாட்டாங்க. ஒருத்தரை பற்றி கோள், பொய் சொல்லமாட்டாங்க. இப்டீ சொல்லமாட்டாங்க, பேசமாட்டாங்கன்னா, சாதாரணமா இல்ல. தப்.................பித் தவறிகூட, மறந்துங்கூட, எந்த சமயத்திலும் அப்படி கெட்டதை பேசமாட்டாங்க. பேசமாட்டாங்க கூட இல்ல. அப்படி பேச அவங்களால முடியவே முடியாதாம். வாய்ப்பே இல்ல. அவ்ளோ................... நல்லவங்களாம் ஒழுக்கமா வாழ்றவங்க.

ஆக மொத்தத்தில, நல்ல ஒழுக்கமாக வாழ்றவங்க, மறந்தும்கூட தீய சொற்களை சொல்லமாட்டாங்க.

Heezulia :smile:
Last edited by heezulia on Mon Apr 02, 2018 5:39 pm, edited 1 time in total.
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1516
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re: திருக்குறள் - பொழிப்புடன்!

Postby heezulia » Mon Apr 02, 2018 5:39 pm

02.04.2018

1. அறத்துப்பால்
2. இல்லறவியல் 14. ஒழுக்கமுடைமை
===================================
140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்


பதவுரை : உலகத்தோடு ஒட்ட – முன்னால பெரியவங்க வாழ்ந்த மாதிரி
ஒழுகல் – நடப்பது
கல்லார் – தெரியாதவங்க


பொருள் : நாம உலகத்தில எப்படி ஒழுக்கமாக வாழணும், என்ன மாத்ரி நடந்துக்கணும்னு பெரியவங்க நிறைய அறநூல்கள் எழுதி வச்சுட்டு போயிருக்காங்க. ஒழுக்கத்தை பல வழிகளில் சொல்லியிருக்காங்க. அந்த காலத்தில அதுபடிதான் பெரியவங்க வாழ்ந்துட்டும் இருந்திருக்காங்க. அதேமாதிரி நாமும் ஒழுக்கமா வாழணும். அப்படி ஒழுக்கமாக வாழ்றதை பற்றி தெரிஞ்சுக்காம இருக்கிறவங்க, எவ்ளோ நிறைய படிப்பு படிச்சிருந்தாலும், அவங்க அறிவில்லாதவங்களுக்கு சமம்.

Heezulia :smile:
User avatar
heezulia
Golden Contributor
 
Posts: 1516
Joined: Wed Aug 22, 2007 2:56 pm
Location: India

Re: தினம் ஒரு திருக்குறள் - பொழிப்புடன்!

Postby vcsics » Tue Apr 03, 2018 6:48 pm

நான் வேறு மாதிரி நினைக்கிறேன்.
உலகத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்களோ அப்படியே நாமும் நடந்து கொள்ளவில்லை என்றால் அறிவில்லாதவர் என்று இகழ்வார்கள்.
இப்படிக்கு உங்கள் அன்பன் VCS(V.Chinnaswamy)
User avatar
vcsics
Power Contributor
 
Posts: 1309
Joined: Tue Nov 08, 2011 9:12 am
Location: Chennai India

Previous

Return to Miscellaneous

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search