தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sun Jan 24, 2016 1:25 pm

இந்த உலகத்தில் உள்ள அணைத்து
நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி
இருக்கும்? இதை கேள்வியை உலகில் உள்ள
நவீன விஞ்சானிகளிடமோ அல்லது
மருத்துவரிடமோ கேட்டால் இது
முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே
இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை
தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம்
இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18
சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர்
போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த
மருந்துதான் நவபாஷாணம். இதற்காக அவர்
மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார்
கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து
அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த
பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து
எடுத்தார் அவை(கௌரிபாஷானம்
,கெந்தகபாஷானம்,சீலைபாஷானம்,வீர
ப்பாஷானம்,கச்சாலபாஷானம்,வெள்ளை
பாஷானம் தொட்டிபாஷானம்,ச
ூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9
பாஷானங்களை 9 விதமான எரிபொருளை
கொண்டு சூடு பண்ணி பூமியில்
குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை
புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து
மருந்தாக மக்களுக்கு கொடுத்தார்.இந்த
நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில்
இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது
பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய
சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக
வடித்தார் மருந்தாகவே மக்களுக்கு
கொடுத்திருக்கலாமே என்று. இதைபற்றி
இன்னொரு தகவல் என்னவேன்றால்
நவபாஷானத்தை போகர் கண்டுபிடித்தது
மனிதனின் நோயை போக்குவதற்கு இல்லை
மனிதனை இறப்பே இல்லாமல்
செய்வதற்குதான் கண்டுபிடித்தார் என்று சில
சித்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்
கண்டுபிடித்த நவபாஷாணத்தை பற்றி
கேள்விபட்ட மற்ற சித்தர்கள் போகரை நீ
இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய்
இந்த நவபாஷானத்தை உடனே அழித்து விடு
என்று அறிவுரை கூறினார்கள்.உடனே தன்
தவறை உணர்ந்த போகர் அந்த பாஷாணங்களை
அழிக்க மணமில்லாமல் அதை பொதுமக்கள்
யாரும் பயன்படுத்தமுடியாது படி
முருகன்சிலையாக செய்து பழனியில் வைத்து
விட்டார்.இந்த கதையை கேட்டவுடன் சில
பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க
மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும்
என்று இதை உங்களுக்கு அறிவியல்
பூர்வமாகவே விளக்குகிறேன் அதாவது
இப்போம் உள்ள dna(மரபனு) ஆராய்ச்சியாளர்க
ள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு
மனிதனின் மரபனுவை சுத்திகரிப்பதன் மூலம்
இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம்
என்று கூறுகின்றனர் . அதை போல் இந்த
நவபாஷாணம் ஏன் நமது மரபனுவை
சுத்திகரித்து இறப்பை தடுக்ககூடாது. ஏது
எப்படியோ இந்த நவபாஷானத்தை நமது
அரசாங்கம்தான் ஆய்வுக்கு உட்படுத்தி
அதோடு உண்மை தன்மையை உலகுக்கு
தெரியபடுத்த வேண்டும
மக்கள் அனைவரும் சித்தர்களின்
இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
என்பது என் நோக்கம்.
கிருஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள்
முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும்
சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின்
சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார் இவர்
பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை
செய்தவரும் இவர்தான்.இவரை பற்றிய தகவல்
மிக ஆச்சரியத்தை கொடுக்கும்.இவரை பற்றிய
ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம்
என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலை
படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று
விட்டேன் .இப்பேர்பட்ட தமிழனை உலகம்
முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே
என் நோக்கம்.அவர் இயற்றிய அந்த நூலில்
1799, 1800 ஆம் பாடலில் விமான
தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும்
அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை
வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக
கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல
1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam
engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது
என்றும் கப்பலின் டிசைனிங்கையும்
குறிப்பிட்டிருக்கிறார் இதை 5000 ஆண்டுகள்
முன்பே தமிழன் கண்டுபிடித்துவிட்டான்
என்பது நமக்கெல்லாம் பெருமை ஆனால்
அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம்
என்பது வேதனையளிக்கிறது. தமிழனின் புகழ்
உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின்
முதல் இனமும் முதல்மொழியும் முதல்
அறிவியல் விஞ்சானியும் முதல்
மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும்
தமிழனே.இப்படி தமிழனின் புகழை மறந்து
நாத்திகம் பேசி
தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது
ஒரு மருத்துவர் whatssap ல் பகிர்ந்தது.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Jun 11, 2016 2:17 am

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Wed Jun 22, 2016 1:30 am

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Mar 10, 2018 5:32 pm

முசுமுசுக்கை:

நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.
உடலில் உள்ள தொற்றுக்கிருமிகள் பாதிப்புகள் விலகி, உடல் வலுவாகி, மனம் புத்துணர்ச்சி அடையும். முசுமுசுக்கை கடுமையான சுவாச பாதிப்புகளான ஆஸ்துமா மற்றும் டி.பி. எனும் எலும்புருக்கி வியாதிகளை சரிசெய்து, நுரையீரலை சீராக்கி, உடல் நலம் காக்கும், அரிய மூலிகையாகும்.
முசுமுசுக்கையில் செய்த துவையல், மற்றும் பொரியல் போன்ற உணவுகளை தினமும் சாப்பிட்டு வர, மன நல பாதிப்புகள் சரியாகி, உணர்வுகள் கட்டுப்படும். காண்பவர் மகிழும் வண்ணம், முகமும் அமைதியாகி, பொலிவாகும். இரத்தம் சுத்தமாகி, அதிக இரத்த அழுத்த பாதிப்புகள் விலகி, உடல் நலம் மேம்படும்.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Mar 10, 2018 5:33 pm

சுண்ணாம்பு வின் சூட்சம ம் !!!

எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.

சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தை களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.

இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பின் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.

மாணவர்களுக்கு சுண்ணாம்பால் நினைவாற்றல் பெருகும். படிக்கும் மாணவர்களுக்கு கெட்டித் தயிரில் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் நினைவாற்றல் பெருகும். மூளையின் சக்தி அதிகரிக்கும்.. நீர் மோர், ஜூஸ், தண்ணீரிலும் கலந்து கொடுக்கலாம். நல்ல மாற்றம் தெரியும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்க லாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.

இப்பொழுதெல்லாம் சுண்ணாம்புக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். எந்த மாத்திரையானாலும் அது பக்கவிளைவுகளை தரக்கூடியதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் நம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதிகப்படியாக உள்ளதை வெளியேற்றிவிடும். ஆனால் மாத்திரைகள் அப்படியில்லை. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கிவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும். கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும். அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம். மிக குறைந்த அளவில் சுண்ணாம்பு கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள், பற்கள் பலம்பெறும். தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.

நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து. தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத் திருப்பதற்கு இதுதான் காரணம்.

பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடைநாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது. வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.

குளிர்காலத்தில் தொண்டை கட்டிக்கொண்டால் முருங்கைச் சாற்றுடன் கொஞ்சம் சுண்ணாம்பை குழைத்து தொண்டையின் வெளிப்புறத்தில் பரவலாக பூசிவிட வேண்டும். தொண்டை கமறல் நீங்கிவிடும். சுண்ணாம்பை நேரிடையாக சாப்பிட முடியாது. அதைப் பதப்படுத்தி சாப்பிடும் பக்குவத்தில் கடைகளில் விற் கிறார்கள். கலர் சேர்க்காத வெள்ளை சுண்ணாம்புதான் சிறந்தது.

நன்றி :-Hamsabai Santhana Krishnan
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Mar 10, 2018 5:35 pm

பாட்டி வைத்தியம்:-

வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.

பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.

வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.

வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.

வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்.

* சாணி வரட்டியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

* தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகலாம்.

* ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

* ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தயணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

* துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

* உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

* அதுபோல மல்லி இலைச்சாறு சிறு சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

* மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணரு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

* நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றில் பற்று போடலாம்

மருந்தில்லா மருத்துவம்:-

* தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
* சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
* கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
* வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
* தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
* அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
* சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
* அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.
* கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.
* மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.
* நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.
* நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.
* மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
* கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.
* முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.
* உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.
* எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.
* குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.

எளிய பாட்டி வைத்தியம்:-

1. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

2. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

3. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

4. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

5. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

6. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

7. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

8. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

9. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

10. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

11. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

12. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Mar 10, 2018 10:52 pm

ஒரு பேரீச்சம் பழத்துடன், கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா?
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Mar 10, 2018 10:55 pm

(Copied from whats app)

குறட்டைப் பழக்கத்தை நொடியில் போக்கும் அற்புத மூலிகைமருத்துவம் பற்றி தெரியுமா உங்களுக்கு
அதிகம் பகிருங்கள்

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.
குடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர்.
வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவிகள், தங்கள் கணவர்களின் இந்தக் குறட்டையால் சரியாக தூக்கம் இல்லாமல், காலையில் பணிநேரத்தில் தூங்கிவழிந்து ஆபிஸ் பணிகளில் ஈடுபாடு கட்டமுடியாமல், மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கின்றனர். இவ்வளவு இன்னல்களுக்கு காரணமான குறட்டை ஏன் வருகிறது?
யாருக்கெல்லாம் குறட்டை வருகிறது?
நாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியேதான் செல்லவேண்டும், ஆனால் சளித்தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள்,மது அருந்தும் பழக்கம் உள்ளோர், புகைப் பழக்கம் உள்ளோர்,
அதிக உடல் எடை, பிறவிக்குறைபாடு மற்றும் வயதாவதன் காரணமாக, காற்று மூக்கின் வழியே உள்ளே செல்லும்போது,சளி பிரச்னைகளினால் மூச்சுக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு காற்று சரியாக உள்ளிழுக்கப்பட முடியாமல் தன்னிச்சையாக வாய் வழியே, சுவாசக் காற்று செல்ல முற்படும்போது, தொண்டைக்குழாய் அடைப்பினால், சரியாக சுவாசிக்க முடியாமல், சத்தம் வருகிறது.இந்த சத்தமே, குறட்டையாகிறது.
குறட்டையால் வரும் நோய்கள் :
இரவில் உறக்கத்தில் குறட்டை விடுபவர்கள், பகலில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக சோர்வு, அன்றாட வேலைகளில் அக்கறை செலுத்த முடியாமல், மனா உளைச்சல்களுடனே வாழ்கின்றனர். இத்தகைய குறட்டை, இதயத்திற்கு பாதிப்பை தந்து இதய நோய்களைக் கொடுத்துவிடும்.
எல்லோருக்கும் துன்பங்களையே பரிசாக அளிக்கும் இந்தக் கொடூரக் குறட்டையை, அவர்களிடமிருந்து ஓட ஓட விரட்டி அவர்கள் வாழ்வில் மற்றும் குடும்பத்தில் நிம்மதியை அடைய வைப்பது எப்படி?
என்ன செய்யலாம்?
நாம் குறட்டைக்குக் காரணம் அறிந்துகொண்டோம், பிறவியிலேயே உடல்ரீதியாக சுவாசிக்க கோளாறுகள் உள்ளவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மூலம் நலம் பெறலாம்.
அந்த தீர்வுக்கு முன்னால், அவர்கள் சரிசெய்ய வேண்டிய சில விஷயங்கள். முதலாவதாக, சிறிது காலத்திற்காவது, மது மற்றும் புகைப்பழக்கத்தை விட வேண்டும், எளிமையான எளிதில் செரிமாணமாகக்கூடிய உணவுவகைகளை மட்டும் இரவில் உண்ணவேண்டும். படுக்கும்போது ஒருக்கணித்து படுக்க வேண்டும்.உறக்கத்தில் மாறி படுத்தால் பரவாயில்லை, ஆனால் படுக்கப் போகும்போது, ஒருக்களித்தே படுக்கவேண்டும்.
அரிய மருந்து – கற்பூரவல்லி தைலம் :
இப்படி ஒரு மோசமான, குடும்பத்தைப் பாதித்த குறட்டையை, நிம்மதியைக் கெடுத்த குறட்டையை நாம் அதிக செலவில்லாமல் விரட்டலாம், வருகிறீர்களா? உடனே விரட்டுவோம்.
மிக எளிமையான மருந்துதான்,ஆனால் வீரியம் அதிகம்.நாட்டுமருந்து கடைகளில், ஓமத்தைலம் அல்லது கற்பூரவல்லித்தைலம் என்று சிறிய பாட்டிலில் கிடைக்கும் . அதனை வாங்கிக் கொள்ளுங்கள்.
பச்சைக் கற்பூரம் :
அந்த தைலத்துடன், சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து,சிறிதளவு விரலில் எடுத்து, குறட்டை விடும் நபரின் மூக்கில் அல்லது வாயின் வழியே செல்லும் சுவாசத்தில் வைக்க, அந்தத்தைலம் சுவாசத்தின் வழியே உள்ளே செல்லும், செல்லும்போதே ஆக்சிஜன் பற்றாக்குறையால் தடைபட்ட சுவாசத்தை அதிவிரைவில் சரிசெய்யும்,. இதுபோல சில முறை செய்துவர, நிமிடத்தில் குறட்டை நீங்கும்.
குறட்டை விடுபவரும் சிரமமின்றி மூச்சு விட்டு சுவாசிப்பது,அவரின் அமைதியான முகத்தின் வழியே அறியலாம். மேலும், இந்தத் தைலத்துடன் சிறிது மின்ட் ஆயிலும் சேர்த்து உபயோகிக்கலாம், மருந்தின் காரத்தன்மையை குறைந்து, குளுமையுடன் செயலாற்ற வைக்கும்.
சில தினங்களில், குறட்டை விடுபவரின் சுவாசம் சீராகி,அமைதியாக உறங்குவார், அவர் மட்டுமா, அவரின் குடும்பத்தாரும்தான்.
கவனிக்க வேண்டியவை :
இதிலே மிக முக்கியம், உங்கள் விரல் தப்பித்தவறி, அவரின் மூக்கின்மீதோ அல்லது வாயிலோ பட்டுவிட்டால், குறட்டை விடுபவருக்கு, அது அதிக எரிச்சல் கொடுக்கும்.
அவர் தூக்கம் கலைந்து, உங்களை சத்தமிட்டு, பின் சண்டையின் இறுதியில், பொறுமையிழந்து நீங்கள் அவரைத் தேவை இல்லாமல் அடித்து, உறங்க வைக்க வேண்டியதிருக்கும், எதற்கு பாவம், போகட்டும் விட்டுவிடுங்கள், விரைவில்தான் அவர் குறட்டை நீங்கி நீங்களும் நிம்மதியடைப்போகிறீர்களே,
எனவே, அவரின் உடலில் படாமல் சிறிதளவு இந்தத்தைலத்தை சுவாசத்தில் வைத்து, அவர் குறட்டையிலிருந்து குணமடையச் செய்யுங்கள். நீங்களும் நன்கு உறங்கி நலம் பெறலாம்.
இன்றே தொடங்குங்கள், நீங்கள் அதிசயமடைவீர்கள். மிக விரைவில் குறட்டை நீங்கும், நிரந்தரமாக!
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Mar 10, 2018 10:56 pm

*வெங்காயத்தை இப்படி பயன்படுத்தாதீங்க, அது ரொம்பவே ஆபத்து.*

வெங்காயம் நாம தினம் தினம் சாம்பாருக்கு பயன்படுத்தும் ஒரு பொருள்.வெங்காயம் இல்லாத சாம்பாரு இல்லைணு கூட சொல்லலாம். ஆன இந்த வெங்காயத்தை சரியா பயன்படுத்தவில்லை என்றால் நம் உயிருக்கு ஆபத்து வரும்.

அப்படி என்ன உயிருக்கு ஆபத்து என்று கேட்கிறீர்களா ?

அந்த காலத்தில் பாட்டி எல்லாம் யாருக்காவது காய்ச்சல் வந்தால் வெங்காயத்தை இரண்டாக வெட்டி தலையில் இரண்டு பக்கமும் வைத்து விடுவாங்க. அது எதுக்கு தெரியுமா?

வெட்டி வைக்கும் வெங்காயத்திற்கு அது சுற்றி உள்ள கிருமிகள் எல்லாவற்றையும் இழுத்து தன் வசம் வைத்து கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் தான் அந்த காலத்தில் நம் பாட்டி எல்லாம் காய்ச்சல் வந்தவருக்கும் நோய்வாய் பட்டவர்களுக்கும் வெங்காயத்தின் மூலம் மருந்து கொடுத்து உள்ளனர்.

வெங்காயத்தை வெட்டி அவர்கள் அருகில் வைப்பது நாள் அவர்களுக்கு உள்ள கிருமிகளும் அவர்களை தாக்கிய கிருமிகளும் வெங்காயம் இழுத்து தன் வசம் வைத்து கொள்ளும். அதனால் அந்த நோயாளி நோய் விட்டு சீக்கிரம் குணம் அடைவார்கள்.

இதிலிருந்து நாம தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெட்டி வைத்த வெங்காயம் அதை சுற்றி உள்ள கிருமி எல்லாவற்றையும் தன் வசம் படுத்தி கொள்கிறது அதை பயன்படுத்தும் நமக்கு ரொம்ப ரொம்ப நோய்வாய் படுவதற்கு நிறைய காரணம் இருக்கிறது.

உதாரணமாக நாம ஹோட்டல், தெரு ஓர கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுகிறோம் சாப்பிட்ட பிறகு நமக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது அது எல்லாம் இந்த காரணத்தால் தான் வருகிறது.

ஹோட்டல் மற்றும் தெரு ஓர கடைகளில் அப்ப அப்ப வெங்காயத்தை வெட்ட மாட்டாங்க. அதிகாலை எழுந்த உடனே ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் வெங்காயம் அனைத்தையும் வெட்டி வைத்து விடுவார்கள்.

அதனால் சுத்தி உள்ள தூசிகள் கிருமிகள், ரோட்டோர சாக்கடையில் உள்ள அசுத்தங்களில் உள்ள கிருமிகள் எல்லாவற்றையும் வெங்காயம் தன் வசம் படுத்தி வைத்துகொள்கிறது.

அதை என்னதான் சமைத்தாலும் அது நம் உடலுக்கு உள்ளே போய் நமக்கு பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதனால் தான் நாம வெளியில் வாங்கி சாப்பிடும் சாப்பாடு நம் உடலுக்கு எத்துகிறது இல்லை.

ஹோட்டலில் மட்டும் இல்லை இந்த காலத்தில் பெண்கள் வெங்காயத்தை அதிகாலையிலே வெட்டி அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்கிறார்கள்

இது ரொம்ப ரொம்ப ஆபத்து. வெட்டி வைத்த வெங்காயம் எங்கு எல்லாம் இருக்கிறதே அதை சுற்றி உள்ள கிருமிகள் அந்த வெங்காயத்தில் தான் இருக்கும். அதனால் தான் நமக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது.

வெங்காயத்தை மட்டும் நாம எப்ப சமைக்க போகிறோமோ அந்த சமயத்தில் வெட்டி வைத்து சமைத்தால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Mar 10, 2018 10:59 pm

நீன்ட நாள் நல் ஆயுளேடு வாழ ரகசிய உணவு(மருந்து)*

*இதய பிரச்சினைகளுக்கு,
(ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க),

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க,

பச்சை பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!

சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்!
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி,
சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர,
"எம தர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

குறிப்பு: இது மருந்தல்ல!
உணவு!

நேபாளிய மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது.....!
nandri saikodeewaran
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sun Apr 08, 2018 2:02 pm

வயது முதிர்ந்த பெண்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட சத்தான காய்கறிகளைச் சாப்பிட்டு வருவதால், அவர்களுக்குப் பக்கவாதம் நோய் தாக்குவது குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் பக்கவாதம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
சுமார் 70 வயதான 954 பெண்களிடம் ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில் வெளிவந்த முடிவுகளின் விவரம், “வயதில் முதிர்ந்த பெண்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்களைச் சாப்பிட்டு வருவதால் பக்கவாதம் நோயில் இருந்து விடுபடுகிறார்கள்.
தினமும் மூன்றுவேளை உணவில் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிட்டு வருவதால், ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், முட்டைகோஸ் கீரை வகைகளைச் சாப்பிடுவதால், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன” என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வு குறித்து, அமெரிக்காவில் உள்ள இதயத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், “இந்த ஆய்வின் மூலம், இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய, சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் எனத் தெரியவந்தது. இதனால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் கணிசமாகக் குறைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Image
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sun Apr 08, 2018 3:19 pm

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். வெற்றிலை வயிற்றில் உள்ள வாயுவை அகற்ற கூடியது. செரிமானத்தை சீர் செய்யும் தன்மை கொண்டது. மூளை, இதயம், குடல், சிறுநீர் பை ஆகியவற்றை தூண்டும் தன்மை உடையது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வெற்றிலை சாற்றை பூசுவதால் புண்கள் விரைவில் ஆறும். அடிப்பட்ட காயங்கள் சரியாகும். வெற்றிலை மனம், சுவை, காரத்தன்மை கொண்டது.

வெற்றிலையை பயன்படுத்தி பசியை தூண்டும் ரசம் தயாரிக்கலாம். செய்முறை: 3 வெற்றிலைகளை எடுத்து காம்புகளை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 2 பல் பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சிறிது பெருங்காயப் பொடி, கடுகு, காய்ந்த மிளகாய் போடவும். இதனுடன் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் வெற்றிலை கலைவையை சேர்க்கவும். இதனுடன் புளிகரைசல் சேர்த்து நீர்விடவும். பின்னர் தக்காளி துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. இந்த ரசத்தை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர நெஞ்சக கோளாறுகள் விலகிப்போகும். சளி வெளியேறும். செரிமானத்தை சீர்செய்ய கூடியதாகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல் இல்லாமல் போகும். இதயத்துக்கு இதம் தரக்கூடியது. ரத்தத்தை அழுத்தத்தை சமன்படுத்தும்.

வெற்றிலையை பயன்படுத்தி இருமல், சளியை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 வெற்றிலைகளை துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ஏலக்காய், லவங்கம், உலர்ந்த திராட்சை கலவையை நசுக்கி சேர்க்கவும். பின்னர், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடித்து குடித்துவர உடல் பலம் பெறுகிறது. நெஞ்சக சளியை கரைக்கும். இதய ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். குடலில் உள்ள புண்களை ஆற்றும். குடலை தூய்மைப்படுத்தும். பசியை தூண்டும். சிறுநீர் தாரையில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும். இந்த தேனீர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதுகாப்பானதாகிறது.

குழந்தைகளுக்கு நெஞ்சக சளியை கரைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் 2 சிட்டிகை கற்பூர தூள் போடவும். வெற்றிலைகளை ஒன்றன் மீது ஒன்றாவை வைத்து வாட்டி ஆறவைக்கவும். இளஞ்சூடாக இருக்கும்போது மார்பு, முதுகில் வைக்கும் நெஞ்சக சளி கரையும். தலைக்கு பற்றாக போடும்போது தலைவலி சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட வெற்றிலை வாயுவை அகற்றுகிறது. உணவு செரிமானம் ஆவதற்கு உதவுகிறது. இதய ஓட்டத்தை சீர் செய்கிறது.

சிறுநீரகத்துக்கு பலம் கொடுக்கிறது. ஈரலுக்கு இதம் தருகிறது. சளி, இருமலை போக்கி நுரையீரலுக்கு பலம் தருக்கிறது. வாய்க்கு மணம், பற்களுக்கு பலம் கொடுக்க கூடியதாக விளங்குகிறது. வெற்றிலையை பயன்படுத்துவதன் மூலம் நாம் நலம் பெறலாம். யானைக்கால், விரை வீக்கத்துகான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைகளுக்கு வல்லாரை மருந்தாகிறது. வல்லாரை கீரையை நன்றாக அறைத்து பூசும்போது வீக்கம் கரையும்.

Nandri Dinakaran
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sun Apr 08, 2018 3:27 pm

சிவப்புக்_கொய்யா பழங்கள்

பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.

கொய்யாப்பழத்துடன் சப்போட்டா பழத்தைச் சேர்த்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வலுப்பெறும். ரத்தம் சுத்தமாகும்.

மதிய உணவிற்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிட்டால், உடல் வலுப்பெறுவதோடு ரத்தமும் சுத்தமாகும். ஜீரணம் எளிதாகும். மலச்சிக்கல் அறவே நீங்கும். வயிற்றுப் புண் குணமாகும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும், மூட்டு வலி, மூல நோய், சிறுநீரகக் கோளாறு உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.

கொய்யா இலைகளைச் சந்தனத்துடன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி, மற்றும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

கொய்யாப்பழத்தில் அமிலத்தன்மை அதிகமிருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது...
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sun Apr 08, 2018 3:39 pm

மன உளைச்சல், ரத்தக்கொதிப்பு
இதனால் உண்டாகும் தலைவலிக்கு*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

தேவையான பொருட்கள்:
............................................

துளசி இலை – 1 கைப்பிடி

ஆவாரம் பூ – 5 கிராம்

சீரகம் – 5 கிராம்

திப்பிலி – 5 கிராம்

செய்முறை:
...................

இவையனைத்தையும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துச் சாப்பிட, மன உளைச்சல் நீங்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

மேற்கண்ட குறைபாடுடையோர், எண்ணெய் வறுவல், மாவுப்பதார்த்தங்கள், அசைவ உணவுகள், ஊறுகாய் போன்றவற்றை அறவே நீக்கினால் நோயிலிருந்து முழுமையாய் மீளலாம்.

புகை, போதையினால் தலைவலியின் பாதிப்புக்கு உள்ளானவர்கள், காலை வெறும் வயிற்றில், கீழாநெல்லி, அதிமதுரம், சோம்பு இவற்றைச் சம அளவாய் எடுத்து, விழுதாய் அரைத்துப் பாலுடன் கலந்து சாப்பிட, போதையால் வரும் தலைவலி தீரும்.

தொடர்ந்து சாப்பிட மது அருந்தும் பழக்கம் குறைய ஆரம்பிக்கும்
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3839
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Previous

Return to Health/Fashion & Beauty Tips

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search