Very very important message. Please read till the end

Very very important message. Please read till the end

Postby iiyfn » Tue Sep 19, 2017 1:03 am

Very very important message. Please read till the end...

உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க…

மாசத்துக்கு ஒரு தடவை…??

மாசத்துக்கு ஒரு தடவைன்னா... ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படி கொழுப்பு சேரும்…?

கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படி சுகர் வருது…?

பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?

உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது…?

ஆமாம்! வீட்ல சமையலுக்கு எண்ணெய் வாங்குகிறோம், பொறிச்சாலும் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்.

இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க

ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்

உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான் சூரியகாந்தியை பயிரிடறாங்க

அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது

அப்படியிருக்கும்போது கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது?

குரூட் ஆயிலிலிருந்து… (மினரல் ஆயில்)

ரோடு போடுறதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதான் எடுக்குறாங்க…

அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், சூரியகாந்தி எண்ணெய்யை எடுக்கிறாங்க

அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு.. அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன், மட்டன், மீன், கூட்டு, பொரியல் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.

நாம் வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல.., அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நாம் பார்த்திருப்போமா?

பாருங்கள்... உண்மை புரியும்.

சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்லை... நாம் யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாமே குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்

அப்போ நாம் சாப்பிடவே முடியாதா?

ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய், சமையலுக்கு நல்லெண்ணெய்.

எங்க போய் வாங்குறது ? யாரை நம்பி வாங்குறது ?

யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்…
நல்லெண்ணெய் வேணுமா.. நாலு எள்ளு
கடலை எண்ணெய் வேணுமா.. கடலை 4 கிலோ
செக்கு உங்கள் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடிங்கள்

உங்கள் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா..
ஒரு நாள்; ஆபஸ் லீவ் நாள்ள மாலுக்கு போறத நிறுத்திட்டு; செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வாங்க… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாருங்க… ஆரோக்கியம் தானா வரும்.

ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலா..? என்று என்ன வேண்டாம்.

ஆரோக்கியமா வாழனும், இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.

இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்.

கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…?

கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது.

கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நாம் பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல 99.9 சதவீதம் மறைமுகமா கொழுப்பு இருக்கு.

கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதா..?

இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும் நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்

கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது

போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உடம்பை முதல்ல பாருங்க

பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு.. எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை

நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்

இங்க இயற்கை மாறல… மாறினது நாம்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல... அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி.

இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்கு

இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோ?
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: Very very important message. Please read till the end

Postby Senguttavanj » Tue Sep 19, 2017 1:14 am

வணக்கம். அன்புள்ள நண்பர் நசீர் அவர்களுக்கு ....மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்!
"காற்றினிலே வரும் கீதம்" உனது கீதமல்லவா!
User avatar
Senguttavanj
Active Member
 
Posts: 869
Joined: Mon Jul 27, 2015 8:09 pm
Location: சென்னை

Re: Very very important message. Please read till the end

Postby vinothkumar » Tue Sep 19, 2017 11:33 am

பயனுள்ள தகவல் நன்றிகள் நாசர் சார்
vinothkumar
Active Member
 
Posts: 558
Joined: Wed Jul 25, 2012 12:02 pm

Re: Very very important message. Please read till the end

Postby kaththavarayan » Wed Sep 20, 2017 6:33 pm

அன்புள்ள நாசர்,

அதிர்ச்சியூட்டும் தகவல்.

எடிபிள் ஆயில் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் நண்பனிடம் மேலதிக விவரங்கங்களை கேட்டுள்ளேன். கிடைத்ததும் பகிர்கிறேன்.

எங்க ஊர்லல்லாம் எண்ணெய் செக்கு இருக்கு................. :lol:

அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2691
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: Very very important message. Please read till the end

Postby kaththavarayan » Thu Sep 21, 2017 10:03 pm

அன்புள்ள நாசர்,

தாங்கள் பதிவு செய்துள்ள அந்த செய்தி கொஞ்சம் தவறானது. கொஞ்சம் சரியானது

நண்பனிடம் கேட்டறிந்த விளக்கம்!

மனிதர்கள் பயன்படுத்தும் ஆயில் பொதுவாக இரண்டு வகைப்படும்
1. மினரல் ஆயில் [எரிபொருளாக பயன்படுவது]
2. எடிபிள் ஆயில் [சமையலுக்கு பயன்படுவது]

நாம் பயன்படுத்தும் எடிபிள் ஆயில்
1. கடலை எண்ணெய்
2. நல்லெண்ணெய்
3. தேங்காய் எண்ணெய்
4. விளக்கெண்ணெய்
5. வேப்பெண்ணெய்
==
6. சன் ஃபிளவர் ஆயில்
7. பார்ம் ஆயில்
8. ரைஸ் பிரான் ஆயில்
9. சோயா பீன் ஆயில்
10. வனஸ்பதி ஆயில்

மேற்கூறியதில் முதல் 5 நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்தது. அடுத்த 5 புதுவரவு.

இந்த இரண்டிற்கும் இடையே வர்த்தக உலகில் ஏற்பட்டுள்ள போட்டிதான் நீங்கள் பதிவு செய்துள்ள பதிவுக்கு காரணம்.

இந்த இரண்டு பிரிவில் எது சிறந்தது? இந்த கேள்விக்கு விடை ரொம்ப எளிது.

கடலையை நாம் காலம் காலமாக அப்படியே சாப்பிட்டு வந்துள்ளோம்.
எள்ளை நாம் காலம் காலமாக அப்படியே சாப்பிட்டு வந்துள்ளோம்.
தேங்காயை நாம் காலம் காலமாக அப்படியே சாப்பிட்டு வந்துள்ளோம்

இந்த மூன்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு நமது உடற்கூறு பழக்கப்பட்டுள்ளது. ஆகையால் நமக்கு [இந்தியர்களுக்கு] இந்த மூன்று எண்ணெய்களும் சிறந்தது.

அப்படி என்றால் புதிய ஆயில்களுக்கான தேவை ஏன் வந்தது?

பொதுவாக உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியர் ஒருவர் பயன்படுத்தும் எண்ணெய்யின் அளவு மிகவும் குறைவு. ஆனால் இந்திய எண்ணெய் வர்த்தகச் சந்தை மிகப்பெரியது.

பிரேசில் அர்ஜென்டினா போன்ற தென்அமெரிக்க நாடுகளில் பெருமளவில் சூரியகாந்தி பயிரப்படுகிறது, இது போல உலகின் பல்வேறு பகுதிகளில் சோயா & பார்ம் ஆயில்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆயில்களை இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்கிறது.

விலையும் குறைவு என்பதால் இந்த ஆயில்கள் இந்தியர்களை ஈர்த்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

எந்த எண்ணெய் சிறந்தது வேதியியல் என்னதான் சொல்கிறது?

எந்த எண்ணெய் ஆனாலும் அதில் இருப்பது 100% கொழுப்பே!

அதில் நல்ல கொழுப்பு எவ்வளவு கெட்ட கொழுப்பு எவ்வளவு என்பதுதான் முக்கியம்.

நமது உமிழ்நீரில் உள்ள என்சைம்களின் பிரதான வேலைகளில் ஒன்று இந்த கொழுப்புகளை உடைப்பது.
எளிதில் உடையக்கூடிய கொழுப்புகளை கொண்ட எண்ணெய் சிறந்தது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறவேண்டுமானால்;

பொதுவாக அனைத்து எண்ணெய்களிலும் 18 கார்பன் அனுக்கள் உண்டு.
தேங்காய் எண்ணெய்யில் இந்த எண்ணிக்கை குறைவு.

எண்ணெய்களின் கெமிக்கல் ஸ்ட்ரக்சர் CH2 என நீண்டு கொண்டு போகும். கார்பன் அனுக்களுக்கிடையே double bond [=] அதிக அளவில் இருந்தால் அதை எளிதில் உடைக்க முடியும். single bond ஐ உடைப்பது சற்று சிரமம்.

வனஸ்பதியில் வேதிவினை மூலம் ஹைட்ரஜன் [H] செலுத்தப்பட்டு single bond அதிக அளவில் இருக்கும்,

இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வருவது.

1. வனஸ்பதியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது
2. சோயா பீன் ஆயில், பார்ம் ஆயில், ரைஸ் பிரான் ஆயில், சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றில் சன் ஃபிளவர் ஆயில் சிறந்தது.
3. கடலை எண்ணெய் ஐ விட நல்லெண்ணெய் சிறந்தது
4. இவை அணைத்தையும் விட தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்தது [கார்பன் அனுகள் குறைவு] ஆனால் ருசி குறைவு.

இதயத்திற்கு இதமான நல்லெண்ணெய்யைத்தானே உபயோகிக்கிறோம் அப்படியிருந்தும் கொழுப்பு அதிகரிக்குதே என கேள்வி கேட்பவர்களுக்கு;

ஒரே பதில்.

"கலப்படம்"

குறைந்த விலையுள்ள [அதிக single bond உள்ள] எண்ணெய்யை அதிக விலையுள்ள எண்ணெய்யுடன் கலப்பதால் இது நேர்கிறது.

=============
செக்கில் ஆட்டும் எண்ணெய்யின் சாதகம் பாதகம்:

பாதகம்:
1. வேலைப்பாடு அதிகம்
2. வடிகட்டும் திறன் குறைவு [ இது ஒரு குறையே இல்லை]
3. சுத்தம் பார்ப்பவர்கள் குற்றம் காணக்கூடும்
4. நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது

சாதகம்:
1. விலை குறைவு
2. நம்பகத்தன்மை அதிகம்

செக்கில் ஆட்டிய எண்ணெய் என்று விளம்பரம் வந்தால் அதை நம்ப வேண்டாம். அது ஒரு மார்க்கெட்டிங் உத்தி [ இப்போ நாட்டு மாட்டு பால் பிஸ்கட் என விளம்பரம் வருவது போல] செக்கில் ஆட்டாமல் எண்ணெய் எடுக்கவே முடியாது.
=============

சன் ஃபிளவர் ஆயிலுடன் மினரல் ஆயில்களை கலப்படம் செய்கிறார்களா?

இல்லவே இல்லை.
இது சாத்தியமே இல்லை.

அவ்வாறு கலந்தால் "பேதி சீத பேதி" என வாயிலும் வயிற்றிலும் மடை திறக்கப்பட்டுவிடப்படும்.

==============

கடைசியாக;

ஆயில்களை குறைத்துக் கொள்வது நலம்.
எண்ணெய்யை குறைத்து குழம்பில் தேங்காயை அதிகமாக சேர்க்கலாம்.

எம்.ஜி.ஆர் போல தகதகவென மிண்ணலாம்.


அன்புடன்

காத்தவராயன்

பிகு:
இந்த கட்டுரைக்கு உதவி "பாலமுருகன் அண்ணாமலைச்சாமி" [என்னுடைய முகநூல் நட்பு வட்டத்தில் காணலாம்] கெமிக்கல் இன்ஞ்சினியர். உறவினன் மற்றும் நண்பன் . சென்னை கோல்டு வின்னர் ஆயில் நிறுவனத்தில் பணியை தொடங்கி, ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றி, தற்போது ஆஸ்திரேலியாவில் எடிபிள் ஆயில் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறான்.
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2691
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: Very very important message. Please read till the end

Postby Rainbow » Thu Sep 21, 2017 11:23 pm

அன்பு தம்பிகள் நாசர் மற்றும் கார்த்திக்,

அருமையான டாபிக்.

இங்கு நம் தளத்தில் Food Tech படித்த நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் பெயர் பாலா @ VITMA என்று நினைவு. ஒருமுறை உணவு சம்பந்தப்பட்ட ஒரு பதிவு இட்டிருந்தார். அவராலும் விளக்கம் கூற முடியும் என எண்ணுகிறேன் .

இங்கே நான் விகடனில் படித்தது.

-----------------------------------------------------------------------------

நாமே நமக்கான எண்ணெய் எடுக்கலாம்... வீட்டுக்குள் ‘மினி’ செக்கு!

உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்துவந்த பல பாரம்பர்ய முறைகள் இன்று பெரும்பாலும் நம்மிடையே இல்லை. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் மரச்செக்கு எண்ணெய்யும் ஒன்று. ஆனால், சமீப காலமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்பு உணர்வின் காரணமாக ஓரளவு மரச்செக்கு எண்ணெய் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் வெளியே கிடைக்கும் எண்ணெய் வகைகளில் பெரும்பாலானவை கலப்படம் செய்யப்பட்டது என்பதுதான்.

நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எண்ணெய் கலந்திருக்கும். இந்த அளவுக்கு உடலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்களை வாங்கும் மக்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால்தான் மரச்செக்கு எண்ணெய் வகைகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. பளபளக்கும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையாகும் எண்ணெய்கள் உடலுக்கு நன்மை தருகிறதா என்றால் கேள்விக்குறிதான். மரச்செக்கு என்று சொல்லி விற்கப்படும் எண்ணெய்களிலும் போலியானவை கலந்திருக்கிறது. நேரிலேயே வரவழைத்து நம் கண்முன்னே செக்கை ஆட்டிக் கொடுக்கும் மரச்செக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.

Video -- https://www.youtube.com/watch?v=rE0L6ngk3g0

இந்நிலையில் எண்ணெய் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எண்ணெய் அதிகமாக உபயோகப்படுத்தும் மக்களுக்குத் தூய எண்ணெய் பெறும் வகையிலான இயந்திரம் ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்த வண்ணம் இருந்தன. தமிழ்நாட்டில் இந்த நவீன செக்கை தயாரித்து விற்பனை செய்து வரும் வடிவேல் குமாரிடம் பேசினோம்.

"நமது முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல அரிய விஷயங்களை இன்று நாம் கைவிட்டுவிட்டோம். ஆனால், அதன் பின்னர்தான் பல நோய்களுக்கு ஆளாகி இருக்கிறோம். அதற்குக் காரணம், பளபளப்பாக உள்ள உணவுப்பொருட்கள் நல்லது என்ற வாசகம் நம்மிடையே திட்டமிட்டு பரப்பட்டது. அதன்படி, ரெடிமேடாக கிடைத்த உணவுகளும், உணவுப் பொருட்களும் நமது வாழ்வை அழிவை நோக்கித் திருப்பியது. அதில் குறிப்பிடத்தக்கது எண்ணெய் வணிகம்தான். அதன் பிடியில் இருந்து தப்பிக்கவே இந்தக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் பிழியும் நவீன செக்கில் இருந்து தொடர்ந்து ஐந்து மணிநேரம் வரைக்கும் எண்ணெய் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதன் பின்னர் சிறிது ஓய்வு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ எள்ளையோ அல்லது தேங்காயையோ 20 நிமிடத்தில் பிழிந்து எண்ணெய்யை எடுத்துக் கொள்ள முடியும். எண்ணெய் அரைக்க ஸ்குரூவிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் எண்ணெய் பிழியும்போது ஏற்படும் வெப்பமும் குறைவாகவே இருக்கும். இதில் வெளிப்படும் வெப்பம் அதிகபட்சமாகவே 25 டிகிரி அளவுக்குத்தான் இருக்கும்.

இது ஒரு அத்தியாவசியமான பொருளும் கூட. இந்த இயந்திரம் உபயோகப்படுத்துவதால் நமக்குத் தேவையான எண்ணெய்களை நாமே சொந்தமாக உற்பத்தி செய்ய முடியும். இதற்காகச் செலவிடப்படும் தொகை வாங்கும் தொகை மட்டும்தான். இந்தக் கருவி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கும். இப்போதைக்கு விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பிக்கும்போது விலை குறையும் வாய்ப்பு அதிகம். இதில் எடுக்கும் எண்ணெய்யில் எந்தவிதமான வேதிப்பொருளும் மாறாமல் சுத்தமான எண்ணெய்யாக கிடைக்கிறது. கலப்பட எண்ணெய்க்கு இது மாற்றாக இருக்கும்" என்றார்.

இதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையையே 100% பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ஆனால், கலப்படத்தைத் தவிர்க்க நிச்சயம் உதவும் எனச் சொல்லலாம்.

- Vikatan


நன்றிகளும் வாழ்த்துக்களும்,

அன்புடன்,

திருநா
____________
ரெயின்போ

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1144
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India

Re: Very very important message. Please read till the end

Postby Rainbow » Thu Sep 21, 2017 11:38 pm

.

எங்களூரில் செய்யப்பட்ட ஒரு விளம்பரம்


Image

Image

Image

Image
User avatar
Rainbow
Power Contributor
 
Posts: 1144
Joined: Mon Mar 19, 2007 5:11 pm
Location: India

Re: Very very important message. Please read till the end

Postby kaththavarayan » Fri Sep 22, 2017 10:46 pm

அன்புள்ள திரு"அண்ணா",

தாங்கள் பகிர்ந்த கட்டுரையையும் நோட்டீஸையும் படித்தேன்.

அந்த நோட்டீஸில் படித்த ஒரு தகவல்.

"ரோட்டரி செக்கில் எண்ணெய் தயாரிக்கும் போது எண்ணெய் கையில் தொடமுடியாத அளவிற்கு சூடாக இருக்கும்"

இது தவறு.

ஆயிலை பிரித்தெடுக்கும் முறை

1. Manual [மரச்செக்கு]
2. Mechanical [ ரோட்டரி செக்கு = சிறு தொழிலாக செய்வது]
3. Mechanical cum Chemical [ பெரும் தொழிலாக செய்யபடுவது]

பலமுறை சென்ற இடம்தான் பலமணி நேரம் அமர்ந்து அரட்டை அடித்த இடம்தான், ஆயினும் இந்த நோட்டீஸை படித்தவுடன்; மேலும் சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு எங்க ஊரில் உள்ள ஆயில் மில்லுக்குச் சென்றேன். அதை நடத்துவது எனது பள்ளி வகுப்புத் தோழன் தான்.

3HP / 5HP மோட்டர் பொருத்தப்பட்டு இயக்கப்படும் கொஞ்சம் பெரிய சைஸ் கிரைண்டரைத்தான் ரோட்டரி செக் என்கிறார்கள். மாட்டுக்கு பதில் மின் மோட்டார். மற்றபடி இதற்கும் மரச்செக்கிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

கையால் தொட்டுப் பார்த்தும் விட்டேன் ; எண்ணெய் சூடாவதில்லை.

மரச்செக்கை விட இதில் உள்ள வசதி 3 கிலோவைக்கூட இதில் அரைக்கலாம். இதைவிட மரச்செக்கின் உரல் பெரியது, மினிமம் அரைக்கவேண்டிய அளவும் அதிகம்.

1 கிலோ சூரியகாந்தியை அரைத்தால் 300கிராம் எண்ணெய் கிடைக்கும்
1 கிலோ எள்ளை அரைத்தால் 400கிராம் எண்ணெய் கிடைக்கும்
1 கிலோ கடலையை அரைத்தால் 500கிராம் எண்ணெய் கிடைக்கும்
1 கிலோ தேங்காயை அரைத்தால் 600கிராம் எண்ணெய் கிடைக்கும்

அரைப்பதற்கு கூலி 1 கிலோவிற்கு ரூ5 மட்டுமே, ஆனால் புண்ணாக்கை அவர்களிடமே கொடுத்துவிட வேண்டும்.

தற்போது 1கிலோ எள்ளின் விலை ரூ 100
சுமார் 2.5 கிலோ எள்ளில் சுமார் 1லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.
தற்போது 1லிட்டர் நல்லெண்ணெய்யின் விலை ரூ 200

எள்ளோடை விலையே ரூ250 ஆனால் எண்ணெய் விலை ரூ 200 தான் இது எப்படி சாத்தியம் ?

சில வருடங்களுக்கு முன்பு முகநூலில் இப்படி ஒரு செய்தி படித்தேன் அது இன்னமும் பரவிக் கொண்டிருக்கும் என நினைக்கிறேன். அது பற்றியும் விளக்க விரும்புகிறேன்.

1 லிட்டர் நல்லெண்ணெய் தயாரிக்கும் போது சுமார் 1.5 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். 1 கிலோ புண்ணாக்கின் விலை ரூ50, ஆக 75 ரூபாய் இதன் மூலம் வருவாய் கிடைக்கிறது, இதை வதந்தி பரப்புபவர்கள் வசதியாக மறந்துவிடுவர்கள்.

இப்போது புரியும் ரூ 5 கூலியில் எப்படி எண்ணெய் ஆட்டிக் கொடுக்க முடிகிறது என்று.

இது சிறுதொழிலாக செய்யப்படும் ரோட்டரி செக்கில் நிலவரம்.

இதையே பெரும் தொழிலாக செய்யும் போது [Mechanical cum Chemical method] 1கிலோ எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யின் அளவும் 100கிராம் முதல் 150கிராம் அதிகம் கிடைக்கும், அதனால் ரூ 200 விலையில் நல்லெண்ணெய் சாத்தியம் [இதற்கு மேலும் லாபத்திற்கு ஆசைப்பட்டு கலப்படம் செய்பவர்களை, சுஜாதா சொன்னது போல பசித்த புலி திண்ணட்டும்]

அந்த நோட்டீஸில் கூறியது போல எண்ணெய் கை வைக்க முடியாத அளவிற்கு சூடாவது இந்த Mechanical cum Chemical method இல் தான். மெக்கானிக்கல் முறையில் சிறு சிறு துகள்களாக ஆக்கிவிட்டு பின்னர் கெமிக்கல் சேர்த்து சூடாக்கி அதிலிருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கிறார்கள். இதில் கலக்கப்படும் கெமிக்கலை பின்னர் எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுத்து பின்னர் அதை மீண்டும் மறு சுழற்சியாக வேதிவிணைக்கு பயன்படுத்துகிறார்கள்.

அந்த கெமிக்கலை எண்ணெய்யில் இருந்து பிரிக்கும் போது முழுவதுமாக பிரிக்க முடியாமல் சில சதவீதங்கள் எண்ணெயிலே தங்கிவிடுவதுண்டு.

காரைக்குடியில் உள்ள கல்லூரித்தோழனின் ரைஸ்பிரான் ஆயில் கம்பெனி இந்த solvent extraction முறையில் நடைபெறுகிறது. கல்லூரி நாட்களில் இதையும் நேரில் பார்த்துள்ளோம். அரிசி உமியில் [தவிடு] இருந்து எப்படி எண்ணெய் தயாரிக்கிறார்கள் என்ற பிரம்மிப்பை நேரில் பார்த்தும் என்னால் நம்பமுடியவில்லை.

எண்ணெய்யை திரும்ப திரும்ப சூடாக்கும் போது அது பாலிமராக மாறும் தன்மையுடையது; அது உடலுக்கு கெடுதலை உண்டாக்க கூடியது என்று முனைவர்.கே.சீனிவாசன் கல்லுரியில் சொல்லிக் கொடுத்துள்ளார். [பெப்சி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளது என்று 1999 லே எங்களுக்கு அறிவுறித்தியவர் இவர், இந்த விஷயம் 2004 இல்தான் மீடியாவின் கவனம் பெற்றது]

இதன் காரணமாகத்தான் சாலையோரக் கடைகளை தவிர்க்கச் சொல்கிறார்கள். சாலையோர கடைக்காரர்கள் பயன்படுத்தும் எண்ணெய் பெரிய ஹோட்டல்களில் பயன்படுத்திய எண்ணெய் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்

மேலும்;

வீடுகளில் எண்ணெய்யை தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்தவும் [தாளிக்க, பொறிக்க]. மறுபடியும் மறுபடியும் சூடு பண்ணுவதை தவிர்க்கவும்.

அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2691
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: Very very important message. Please read till the end

Postby iiyfn » Fri Sep 22, 2017 11:38 pm

kaththavarayan wrote:[பெப்சி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளது என்று 1999 லே எங்களுக்கு அறிவுறித்தியவர் இவர், இந்த விஷயம் 2004 இல்தான் மீடியாவின் கவனம் பெற்றது]

அன்புடன்
காத்தவராயன்


பயனுள்ள தகவல்களை அளித்துள்ள அண்ணன் திருநா மற்றும் அண்ணன் காத்தவராயன் அவர்களுக்கு நன்றி.

என்னதான் இருந்தாலும் பூச்சி மருந்து என்று தெரிந்தும் இந்த சாஃட் ட்ரிங்க்ஸை குடிக்காமல் இருக்க முடிவதில்லை. அதிலும் நான் ரெட் புல், மௌண்டன் டியூ குடிக்காமல் இருப்பதே இல்லை. டியூ குடித்தால் தான் புத்துணர்ச்சியை... அப்படி ஒரு பீலிங்ஸ். :scratch: 8-)
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm


Return to Health/Fashion & Beauty Tips

Who is online

Users browsing this forum: Google [Bot] and 1 guest

  • Advertisement
Custom Search