தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sun Jan 24, 2016 1:25 pm

இந்த உலகத்தில் உள்ள அணைத்து
நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி
இருக்கும்? இதை கேள்வியை உலகில் உள்ள
நவீன விஞ்சானிகளிடமோ அல்லது
மருத்துவரிடமோ கேட்டால் இது
முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே
இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை
தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம்
இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18
சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர்
போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த
மருந்துதான் நவபாஷாணம். இதற்காக அவர்
மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார்
கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து
அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த
பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து
எடுத்தார் அவை(கௌரிபாஷானம்
,கெந்தகபாஷானம்,சீலைபாஷானம்,வீர
ப்பாஷானம்,கச்சாலபாஷானம்,வெள்ளை
பாஷானம் தொட்டிபாஷானம்,ச
ூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9
பாஷானங்களை 9 விதமான எரிபொருளை
கொண்டு சூடு பண்ணி பூமியில்
குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை
புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து
மருந்தாக மக்களுக்கு கொடுத்தார்.இந்த
நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில்
இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது
பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய
சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக
வடித்தார் மருந்தாகவே மக்களுக்கு
கொடுத்திருக்கலாமே என்று. இதைபற்றி
இன்னொரு தகவல் என்னவேன்றால்
நவபாஷானத்தை போகர் கண்டுபிடித்தது
மனிதனின் நோயை போக்குவதற்கு இல்லை
மனிதனை இறப்பே இல்லாமல்
செய்வதற்குதான் கண்டுபிடித்தார் என்று சில
சித்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்
கண்டுபிடித்த நவபாஷாணத்தை பற்றி
கேள்விபட்ட மற்ற சித்தர்கள் போகரை நீ
இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய்
இந்த நவபாஷானத்தை உடனே அழித்து விடு
என்று அறிவுரை கூறினார்கள்.உடனே தன்
தவறை உணர்ந்த போகர் அந்த பாஷாணங்களை
அழிக்க மணமில்லாமல் அதை பொதுமக்கள்
யாரும் பயன்படுத்தமுடியாது படி
முருகன்சிலையாக செய்து பழனியில் வைத்து
விட்டார்.இந்த கதையை கேட்டவுடன் சில
பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க
மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும்
என்று இதை உங்களுக்கு அறிவியல்
பூர்வமாகவே விளக்குகிறேன் அதாவது
இப்போம் உள்ள dna(மரபனு) ஆராய்ச்சியாளர்க
ள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு
மனிதனின் மரபனுவை சுத்திகரிப்பதன் மூலம்
இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம்
என்று கூறுகின்றனர் . அதை போல் இந்த
நவபாஷாணம் ஏன் நமது மரபனுவை
சுத்திகரித்து இறப்பை தடுக்ககூடாது. ஏது
எப்படியோ இந்த நவபாஷானத்தை நமது
அரசாங்கம்தான் ஆய்வுக்கு உட்படுத்தி
அதோடு உண்மை தன்மையை உலகுக்கு
தெரியபடுத்த வேண்டும
மக்கள் அனைவரும் சித்தர்களின்
இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
என்பது என் நோக்கம்.
கிருஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள்
முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும்
சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின்
சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார் இவர்
பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை
செய்தவரும் இவர்தான்.இவரை பற்றிய தகவல்
மிக ஆச்சரியத்தை கொடுக்கும்.இவரை பற்றிய
ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம்
என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலை
படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று
விட்டேன் .இப்பேர்பட்ட தமிழனை உலகம்
முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே
என் நோக்கம்.அவர் இயற்றிய அந்த நூலில்
1799, 1800 ஆம் பாடலில் விமான
தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும்
அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை
வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக
கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல
1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam
engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது
என்றும் கப்பலின் டிசைனிங்கையும்
குறிப்பிட்டிருக்கிறார் இதை 5000 ஆண்டுகள்
முன்பே தமிழன் கண்டுபிடித்துவிட்டான்
என்பது நமக்கெல்லாம் பெருமை ஆனால்
அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம்
என்பது வேதனையளிக்கிறது. தமிழனின் புகழ்
உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின்
முதல் இனமும் முதல்மொழியும் முதல்
அறிவியல் விஞ்சானியும் முதல்
மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும்
தமிழனே.இப்படி தமிழனின் புகழை மறந்து
நாத்திகம் பேசி
தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது
ஒரு மருத்துவர் whatssap ல் பகிர்ந்தது.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3815
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Sat Jun 11, 2016 2:17 am

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3815
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Re: தினம் ஒரு மருத்துவக் குறிப்பு

Postby jillumaya » Wed Jun 22, 2016 1:30 am

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
எல்லோரும்
இன்புற்றிருப்பதுவேயன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!


Loka Samastha Sukino Bawanthu!

நாகை வே. கண்ணன் (ஜில்லுமாயா)
User avatar
jillumaya
Platinum Contributor
 
Posts: 3815
Joined: Mon Jan 10, 2011 1:02 am
Location: தஞ்சாவூர்/கும்பகோணம் ....!

Previous

Return to Health/Fashion & Beauty Tips

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron