Puthu Vellam

Puthu Vellam

Postby venougopal » Tue Feb 13, 2018 3:20 pm

திரைப்படம் : புது வெள்ளம் (1975)
பாடல் : புது வெள்ளம்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
இசை : எம்.பி.ஶ்ரீநிவாஸ்

புது வெள்ளம்... புது வெள்ளம்... புது வெள்ளம்...

இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்
இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஒரு
தங்கு தடையின்றி இது செல்லும் இதை
தடுக்க நினைத்தாலும் ஒடுக்க நினைத்தாலும்
எதிர்த்து நின்று இது வெல்லும்

இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஒரு
தங்கு தடையின்றி இது செல்லும்
புது வெள்ளம்... இது வெல்லும்...

பெரும் காட்டு மரங்களை பேர்த்து
நீர் மேட்டு நிலங்களில் வார்த்து
உங்கள் வாழ்வுக்கு வளங்களை சேர்த்து
நாங்கள் வீதியில் நின்றோம் வேர்த்து

உங்கள் கைகளில் கனத்திடும் பணப்பை
வந்த காரணம் உழவன் கலப்பை
உங்கள் கைகளில் கனத்திடும் பணப்பை
வந்த காரணம் உழவன் கலப்பை
எங்கள் தோழர்கள் வழங்கிய உழைப்பை
உண்டு கொழுத்தது உங்கள் இரைப்பை

இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஒரு
தங்கு தடையின்றி இது செல்லும்
புது வெள்ளம்... இது வெல்லும்...

உங்கள் வருவாய் பெருக்கிய கூட்டம்
இங்கு ஒரு வாய் சோத்துக்கு வாட்டம்
உங்கள் வருவாய் பெருக்கிய கூட்டம்
இங்கு ஒரு வாய் சோத்துக்கு வாட்டம்
இதை அறிவால் உணர்ந்திட வேண்டும்
இல்லை ஒரு நாள் எரிமலை தோன்றும்

வீண் பழிச்சொல்லி தொடுப்பார் வழக்கு
அந்த பாவிகள் நாவினை அடக்கு
வீண் பழிச்சொல்லி தொடுப்பார் வழக்கு
அந்த பாவிகள் நாவினை அடக்கு
நேர் வழியினில் நடப்பவர் தமக்கு
வெற்றி நிச்சியம் காலத்தின் கணக்கு

இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் ஒரு
தங்கு தடையின்றி இது செல்லும்
புது வெள்ளம்... இது வெல்லும்...
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 897
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Return to "P"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron