திரைப்படம் : ஏழை ஜாதி (1993)
பாடல் : அதோ அந்த நதியோரம்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி & குழுவினர்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
இசை : இளையராஜா
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம்
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம்
அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம்
ஆஹாஆ......ஆஹாஆஆ.....
ஓஓஓ...ஓஓஓ....ஓஓஓ......
தூது செல்லடி தோழி வானதி
மாது நிம்மதி மறைந்தடி குறைந்தடி
சேதி சொல்லடி தேவி நாயகி
தேகம் பாதியாய் கரைந்தடி கலங்குதடி
அணை போட்டபோதும் நிலை மாறிடாது
அலைப் போல மோகம் மனம் தாங்கிடாது
நீயில்லாத போதிலே வாழ்வது ஏது காதலே
நினைக்காத நேரம் ஏது
வாடும் போது கூறு தூது
அவன் வரவேண்டும் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம்
ஆஹாஆஆஆஆ...ஓஓஓஓ....
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ...
ஆஹாஆஆஆஆ...ஓஓஓஓ....
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ..
லலால்லாஆஆஆஆ...
லலால்லாஆஆஆஆ...
ஓஓஓ...ஓஓஓ...ஓஓஓ....
கூடல் என்பது கூடி வந்தது
தேடி வந்தது, திரைமறைவில் தெரிகின்றது
தேகம் என்பது கோவில் போன்றது
யாகம் செய்ய வா
பலன் உடனே கிடைக்கின்றது
சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும்
சுவை நாளும் கூடும் துயர் யாவும் போகும்
காதல் என்ற தேசமே ஆளுகின்ற யோகமே
தலைக் கோவில் தீபம் ஏற்று
பாடிப் போச்சு ஆசை ஊற்று
கரம் தொடும்போது சுகம் வரம் தரும் மாது
இனி கரம் தொடும்போது சுகம் தரும் பூ மாது
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம்
அவன் வரவேண்டும் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவிய கூடம்