En Nenjam Unakkaaga

En Nenjam Unakkaaga

Postby pathma » Tue Dec 07, 2010 3:28 am

பாடல்: நான் தந்த மல்லிகையில்
திரைப்படம்: என் நெஞ்சம் உனக்காக
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

நான் தந்த மல்லிகையில் புது வாசமே
இது நீ தந்த புது வாழ்வு என் செல்வமே
நான் இங்கு எண்ணவில்லை நடக்குமென்று
ஒரு நல்வாழ்வு உன்னிடத்தில் கிடைக்குமென்று
நான் தந்த மல்லிகையில் புது வாசமே
இது நீ தந்த புது வாழ்வு என் செல்வமே

நதியொன்று கடலில் சேர யாரிடத்தில் கேட்டது
மழை மேகம் நீர் பொழிய பகலிரவா பார்த்தது
நினைக்காத விஷயம் கூட நேரம் வந்தால் நடக்குது
நீயும் நானும் இணைவோம் என்று யார் நினைத்து பார்த்தது
நினைக்காத விஷயம் கூட நேரம் வந்தால் நடக்குது
நீயும் நானும் இணைவோம் என்று யார் நினைத்து பார்த்தது
நான் தந்த மல்லிகையில் புது வாசமே
இது நீ தந்த புது வாழ்வு என் செல்வமே

என் நெஞ்சம் உனக்காக பாய்கின்ற நதியே
என் நெஞ்சம் முப்போகம் விளைகின்ற நிலமே
என் நெஞ்சம் உனக்காக பாய்கின்ற நதியே
என் நெஞ்சம் முப்போகம் விளைகின்ற நிலமே
கண்களே பள்ளிக்கூடம் காதலே ரகசிய பாடம்
பெண்களே மலர்க்கொடி ஆகும்
ஆண்களே மரக்கிளை ஆகும்...ஆஆஆஆஆஆ

நான் தந்த மல்லிகையில் புது வாசமே
இது நீ தந்த புது வாழ்வு என் செல்வமே
நான் இங்கு எண்ணவில்லை நடக்குமென்று
ஒரு நல்வாழ்வு உன்னிடத்தில் கிடைக்குமென்று
நான் தந்த மல்லிகையில் புது வாசமே
இது நீ தந்த புது வாழ்வு என் செல்வமே
User avatar
pathma
Junior Member
 
Posts: 24
Joined: Thu Oct 12, 2006 11:50 am

Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron