En Aasai Unnoduthaan

En Aasai Unnoduthaan

Postby venougopal » Fri Feb 12, 2010 6:32 am

படம் : என் ஆசை உன்னோடுதான்
பாடல் : தேவி கூந்தலோ
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம் கள்ளூறும்
பூக்கள் யாவுமே என் சீதனம் சங்கீத வீணைதானடி
என் வாகனம் என் ஆதாரம் நீயே
பெண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம் கள்ளூறும்
பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணைதானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

ஆண் : பூவானது பொன்னானது உன் பாதம்
மண் மங்கை காணாதது
பூவானது பொன்னானது உன் பாதம்
மண் மங்கை காணாதது
பெண் : தோள்மீது சாயும் தேனாக பாயும்
தோள்மீது சாயும் தேனாக பாயும்
கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம்
ஆண் : இளம் மங்கையின் கன்னத்தில்
மன்மத வண்ணத்தில் புதிய வாலிபம் பொங்கிவரும்

பெண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம் கள்ளூறும்
பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணைதானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

பெண் : உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
ஆண் : தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
கனவில் விழித்து நிலவில் குளித்து சாகும்வரை
பெண் : நீ தினமும் கனவில் நினைத்து
நினைவில் நிறுத்து இதயம் திறந்து வந்தவளை

ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்
பெண் : கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
ஆண் : சங்கீத வீணைதானடி என் வாகனம்
பெண் : என் ஆதாரம் நீயே
ஆண் & பெண் : லால லாலா
User avatar
venougopal
Golden Contributor
 
Posts: 890
Joined: Tue Apr 15, 2008 6:51 pm
Location: Pondicherry

Return to "E"

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron